இந்தியா, துருக்கி இடையேயான இருதரப்பு வர்த்தகம் 10 பில்லியன் டாலர்களை கடந்து சாதனை..

இந்தியாவும் துருக்கியும் வெள்ளி அன்று இருதரப்பு உறவுகளின் விரிவான மதிப்பாய்வை நடத்தின. 2021-22 ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய வர்த்தக உறவுகள் வளர்ச்சி பாதையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியா-துருக்கி வெளியுறவு அலுவலக ஆலோசனைகளின் (FOC) 11வது அமர்வு துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றது. மேலும் அடுத்தச்சுற்று ஆலோசனை கூட்டத்தை அடுத்த ஆண்டு நடத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. வெளியுறவு ஆலோசனை குழுவிற்கு சஞ்சய் வர்மா தலைமை தாங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, உக்ரைன் மற்றும் இந்தோ-பசுபிக் உள்ளிட்ட இருதரப்பு, பலதரப்பு உள்ளிட்ட உலக பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 2021-22 ஆம் ஆண்டில் இந்தியா-துருக்கி இடையேயான வர்த்தகம் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டி வர்த்தகமாகியுள்ளதா வெளியுறவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

துருக்கியின் ஆட்டோமொபைல், பார்மா மற்றும் ஐடி துறைகளில் இந்திய நிறுவனங்கள் உள்ளன. துருக்கியின் நிறுவனங்கள் இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் துறைகளில் வாய்ப்புகளை பார்க்கின்றன. இருநாடுகளும் பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேலும் மேம்படுத்த ஒப்புக்கொண்டன.

Also Read: இந்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணிப்பு..

இந்தியா துருக்கி இடையேயான இராஜதந்திர உறவு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல பன்முக பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். கடைசி சுற்று ஆலோசனை 8 மே 2019 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்றது. இதில் துருக்கி துணை வெளியுறவு அமைச்சர் செடத் ஒனல் மற்றும் மேற்கு பகுதிக்கான வெளியுறவு அமைச்சர் கிதேஷ் சர்மாவுடன் பேச்சுவார்தை நடத்தினார்.

Also Read: இந்தியா ஐரோப்பிய யூனியன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து..?

பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு பணிக்குழுவின் 4வது கூட்டம் 4 ஜூலை 2019 அன்று துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது நடைபெற்றுள்ள இருதரப்பு உறவுகளின் விரிவான மதிப்பாய்வு கூட்டம் இருநாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என கூறப்பட்டுள்ளது.

Also Read: வடகிழக்கு மாநில தலைநகரங்களை இணைக்க 1 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ள ரயில்வே..

Leave a Reply

Your email address will not be published.