காலையில் பாஜகவில்.. மாலையில் அமரீந்தர் சிங் கட்சியில் இணைந்த பாடகர் பூட்டா முகமது..?

பஞ்சாபி நாட்டுப்புற பாடகர் பூட்டா முகமது லூதியானாவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஜெகாவத் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் சில மணி நேரங்களுக்கு பிறகு பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் உடன் காணப்பட்டார். இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

வதந்திகளுக்கு பதில் கூறிய பூட்டா முகமது, தான் உண்மையில் பாஜகவில் தான் சேர்ந்துள்ளதாகவும், கட்சியின் தீவிர தொண்டனாக இருப்பதாகவும் தெரிவித்தார். இன்று நான் எனது நண்பர் சர்தார் அலி கானுடன் கேப்டன் அமரீந்தர் சிங் வீட்டிற்கு சென்றேன். அங்கு எனது நண்பர் கேப்டன் அமரீந்தரின் பஞ்சாப் லோக் காங்கிரஸில் இணைந்தார்.

இருப்பினும் நானும் அங்கு இருந்ததால் கேப்டன் என் தலையில் சிரோபாவை வைத்தார் என பூட்டா கூறியுள்ளார். நாங்கள் அனைவரும் பாடகர்கள், எங்களுக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. என் நண்பர்கள் வேறு கட்சியில் சேர்ந்ததால் நாங்கள் அவர்களுடன் செல்லக்கூடாது என்றில்லை. இருப்பினும் தான் பாஜகவில் இணைந்ததை கேப்டனிடம் விளக்கியதாக பூட்டா தெரிவித்தார்.

Also Read: உத்தரகாண்டில் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக.. புதிய கருத்துகணிப்பில் தகவல்..

பூட்டா செவ்வாய் கிழமை காலை பாஜகவில் இணைந்தார். பின்னர் மாலை அமரீந்தருடன் தலையில் சீக்கிய சிரோபா இருந்ததால் அது சர்ச்சையாகியது. தற்போது பூட்டா சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். செவ்வாய் கிழமை பூட்டா அகமது, IAS அதிகாரி SR லதார், முன்னாள் IPS அதிகாரி அசோக் பாத் மற்றும் சிரோமணி அகாலி தளம் MLA மோகன் லால் பங்கா ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

Also Read: பாஜகவில் இணைந்தார் மஞ்சிந்தர் சிங் சிர்சா.. அதிர்ச்சியில் சிரோமணி அகாலி தளம்..

2017 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தது. மொத்தம் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களை வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. சிரோமணி அகாலி தளம் 15 இடங்களை வென்றது. பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை துவக்கி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.