மேற்குவங்கத்தில் பரபரப்பு.. பாஜகவின் இளைஞர் பிரிவு தலைவர் சுட்டுக்கொலை..
மேற்குவங்கத்தில் பாஜகவின் இளைஞர் பிரிவு தலைவர் மிதுன் கோஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் மேற்குவங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தின் உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தின் இத்தாஹாரில் உள்ள கிராமத்தில் பாஜகவின் இளைஞர் பிரிவு தலைவர் மிதுன் கோஷ் அவரது வீட்டிலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுகிழமை இரவு 11 மணி அளவில் மிதுன் கோஷ் வீட்டிற்கு வந்த இருவர் அவரை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்து சுட்டு கொலை செய்துள்ளனர்.
பாஜகவின் தினஜ்பூர் மாவட்ட தலைவர் பாசுதேப் சர்க்கார் கூறுகையில், கொலைக்கு திரிணாமுல் கட்சியினர் தான் காரணம் என குற்றம் சாட்டினார். மிதுன் கோஷ்க்கு ஏற்கனவே போனில் சிலர் மிரட்டல் கொடுத்தனர். அதனை அடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் அவர் சுட்டு கொல்லப்பட்ட தகவல் இரவு எனக்கு கிடைத்தது என பாசுதேப் கூறினார்.
மேற்குவங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், மிதுன் கோஷ் கொலைக்கு திரிணாமுல் கட்சியினர் தான் காரணம். இது திரிணாமுல் கட்சியினால் எழுதப்பட்ட திட்டமிட்ட கொலை. அவர்கள் தங்கள் எஜமானர் கூறுவதை நிறைவேற்றி வருகிறார்கள். சமூக விரோத வேட்டை நாய்கள் மீது நடவடிக்கை எடுப்போம். மிதுன் கோஷை நாங்கள் மறக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
Also Read: மீண்டும் ஒரு சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்படும்.. பாகிஸ்தானுக்கு அமித்ஷா எச்சரிக்கை..
ஆனால் இதனை திரிணாமுல் காங்கிரஸ் MLA மொசரப் ஹொசைன் மறுத்துள்ளார். இந்த கொலைக்கும் தங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரவில் மர்ம நபர்கள் யாரவது துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம். அவர்களுக்குள் மத மோதல் இருந்திருக்கலாம் அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கலாம். எல்லாவற்றிற்கும் திரிணாமுல் கட்சியை குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும் என மொசரப் கூறினார்.
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடித்ததில் இருந்தே திரிணாமுல் மற்றும் பாஜக இடையே மோதல் நிலவி வருகிறது.தேர்தலுக்கு பிந்தைய கலவரத்தில் 16 பாஜகவினர் கொல்லப்பட்டனர். பாஜகவினர் மற்றும் இந்துக்கள் பலர் மாநிலத்தை விட்டு ஒடிசா போன்ற அருகில் உள்ள மாநிலங்களுக்கு வெளியேறிவிட்டனர். இந்த தாக்குதல் குறித்து பதிலளிக்க உச்சநீதிமன்றம் திரிணாமுல் கட்சிக்கு உத்தரவிட்டு இருந்தது. தேர்தலுக்கு முன்பும் பல பாஜக நிர்வாகிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: காஷ்மீர் பண்டிட் படுகொலை எதிரொலி.. ஜம்மு காஷ்மீரில் 570 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை..