INS விக்ராந்திற்கான போர் விமான சோதனையுடன் ஏவுகணை சோதனை நடத்திய போயிங்..

போயிங் F/A-18 Super Hornet போர் விமானமானது இந்திய விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து இரண்டு போயிங் AGM-84 ஹர்பூன் ஏவுகணைகளை ஏவ முடியும் என்பதை போயிங் நிருபித்துள்ளது. இருப்பினும் இது மல்டிரோல் கேரியர் போர்ன் ஃபைட்டர்ஸ் (MRCBF) திட்டத்திற்கான புது டெல்லியின் தேவையை விட அதிகமாக உள்ளது.

போயிங் இந்தியாவின் சர்வதேச வணிக மேம்பாட்டிற்கான துணை தலைவர் அலைன் கார்சியா கூறுகையில், இந்தியாவின் கோவாவில் உள்ள INS ஹன்சாவில் உள்ள இந்திய கடற்படையின் கடற்கரை அடிப்படையிலான சோதனை வசதியில் (SBTF) 2022 மே மாத இறுதியில் மற்றும் ஜூன் மாத தொடக்கத்தில் இந்த திறன் நிருபிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

இந்திய விமானந்தாங்கி போர்கப்பல்களில் இருந்து F/A-18 செயல்படும் திறனை சரிபார்க்கும் சோதனைகளின் ஒரு பகுதியாக இந்த ஏவுகணை சோதனை நிருபிக்கப்பட்டுள்ளன. மல்டிரோல் கேரியர் போர் விமானங்கள் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை அதன் உள்நாட்டு விமானந்தாங்கி போர்கப்பலுக்கு 57 போர் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.

இந்த போர் விமானங்கள் INS விக்ராந்த் விமானந்தாங்கி போர்கப்பலில் இயக்கப்பட உள்ளன. 37,000 டன் எடை கொண்ட இந்த விமானந்தாங்கி போர்கப்பல் 2022 ஜூலை மாத தொடக்கத்தில் இறுதிகட்ட சோதனையை முடித்துள்ளது. மேலும் அடுத்த மாதம் இந்திய கடற்படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விமானந்தாங்கி போர்க்கப்பலுக்காக தான் தற்போது போர் விமான சோதனை நடைபெற்று வருகிறது. INS விக்ராந்த் விமானந்தாங்கி போர் கப்பலில் போர் விமானத்திற்கான சோதனை அடுத்த வருடத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.