பாகிஸ்தானின் கராச்சியில் குண்டுவெடிப்பு.. பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்..

பாகிஸ்தானின் கராச்சி கராதர் பகுதியில் உள்ள இக்பால் மார்க்கெட் மற்றும் புதிய மேமன் மசூதிக்கு அருகே நேற்று இரவு நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார் மற்றும் 11 பேர் காயமடைந்துள்ளதாக கராச்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இறந்த பெண் சானியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த குண்டுவெடிப்பில் போலிஸ் வாகனம், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோமொபைல் பொருட்கள் சேதமடைந்தன. கராச்சி காவல்துறை கூறுகையில், IED வெடிகுண்டு தாக்குதல் தான் காரணம் என கூறியுள்ளது. சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் விரைந்து செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எதிரானவர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். இறந்த பெண்ணின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறிய பிரதமர், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்குமாறு முதலமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வெடிகுண்டு தொடர்பாக சிந்து முதல்வர் சையத் முராத் அலி ஷா, போலிசாரிடம் அறிக்கை கேட்டுள்ளார். இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருந்தால் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக உள்ளது. மேலும் அவர்களை நாங்கள் விடுவிக்க மாட்டோம் என சிந்து தகவல் அமைச்சர் ஷர்ஜீல் மேமன் கூறியுள்ளார்.

Also Read: மொரீஷியஸ் அகலேகா தீவில் இந்திய இராணுவ தளம்..? P-8I விமானத்தை நிறுத்த முடிவு..

பயங்கரவாதிகள் எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த வியாழன் கிழமை சதார் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த IED குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். 9 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் ஒரே வாரத்திற்குள் மற்றொரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Also Read: ஜம்மு காஷ்மீரில் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 4 பேர் உயிரிழப்பு..

Leave a Reply

Your email address will not be published.