கொல்கத்தாவில் குழந்தைகள் இல்லம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள்.. போலிசார் விசாரணை..

கொல்கத்தா ஹரிதேவ்பூர் பகுதியில் உள்ள குழந்தைகள் இல்லம் அருகே கைவிடப்பட்ட ஆட்டோ ரிக்‌ஷாவில் இருந்து
19 வெடிகுண்டுகளை போலிசார் கைப்பற்றினர். இது பயங்கரவாத சதித்திட்டத்தின் ஒரு பகுதியா என காவல்துறையினர்
விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரகசிய தகவலின் பேரில் சட்ட அமலாக்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினர். அப்போது ஹரிதேவ்பூர்
காவல் நிலைய பகுதியில் உள்ள 41 பாலி வட்டாரத்தில் உள்ள குழந்தைகள் இல்லம் அருகே சக்ரபெரியா-பிஜோய்கர்
வழிதடத்தில் இயங்கி வந்த கைவிடப்பட்ட ஆட்டோ ரிக்‌ஷா ஒன்றில் இருந்து 19 வெடிகுண்டுகள், ஒரு நாட்டு கைத்துப்பாக்கி
மற்றும் இரண்டு தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சரிபார்த்து வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டுகள் பயங்கரவாத சதித்திட்டத்தின் ஒரு பகுதியா என போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் குண்டுவெடித்ததில் 33 பேர் உயிரிழப்பு..? எச்சரித்த தாலிபான்..

மேலும் ஆட்டோ ரிக்‌ஷாவின் உரிமையாளரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் போலிசார் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை இந்த வெடிகுண்டு தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பிரதமர் மோடி ஜம்மு செல்ல உள்ள நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. CISF வீரர் உயிரிழப்பு..

Leave a Reply

Your email address will not be published.