ஊழல், பாலியல் குற்றம் இரண்டும் இஸ்லாம் சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை: இம்ரான்கான்
ஊழல் மற்றும் பாலியல் குற்றங்கள் முஸ்லிம் உலகம் எதிகொள்ளும் இரண்டு முக்கியமான பிரச்சனை எனவும், இணையத்தில் கிடைக்கும் ஆபாசம் மற்றும் ஆபாச பொருட்களால் மூழ்கி இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களை காப்பாற்ற வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இம்ரான்கான் கடந்த அக்டோபர் மாதம் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் இருந்து எவ்வாறு சிறந்த பாடங்களை மக்களுக்கு பரப்புவது என்று ஆராய்ச்சி செய்வதற்காக ரஹ்மத்துல்-லில்-ஆலமீன் ஆணையத்தை (NRAA) அமைத்தார். இந்த NRAA ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகின் தலைசிறந்த முஸ்லிம் அறிஞர்களுடன் ஞாயிற்றுகிழமை இம்ரான்கான் உரையாற்றினார்.
ரியாசத்-இ-மதீனா: இஸ்லாம், சமூகம் மற்றும் நெறிமுறை மறுமலர்ச்சி என்ற தலைப்பில் உரையாற்றிய பிரதமர் இம்ரான்கான், சமூகத்தில் இரண்டு வகையான குற்றங்கள் உள்ளன. ஒன்று ஊழல் மற்றொன்று பாலியல் குற்றம் என குறிப்பிட்டார். மேலும் நமது சமூகத்தில் பாலியல் குற்றங்கள் கடுமையாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
மொத்தமாக கற்பழிப்பு மற்றும் குழந்தை துஷ்பிரயோகம் ஒரு சதவீதம் அளவிற்கு பதிவாகியுள்ளது. மற்ற 99 சதவீதத்தினர் அதனை எதிர்த்து போராட வேண்டும். ஊழலும் இதே நிலைதான் நீடிக்கிறது, இஸ்லாம் சமூகம் ஊழலை ஏற்றுகொள்ள முடியாததாக மாற்ற வேண்டும். துரதிர்ஷ்டவசமாக காலபோக்கில் ஊழல் நிறைந்த தலைமை உங்களிடம் இருக்கும்போது நீங்கள் ஊழலை ஏற்றுகொள்கிறீர்கள் என நவாஷ் செரீஃபை கடுமையாக விமர்சித்தார்.
Also Read: சவுதி தூதரை அவமதித்த பாகிஸ்தான் அமைச்சர்.. இம்ரான்கானுக்கு குவியும் கண்டனம்..
திங்கள் அன்று நடந்த பாக்-சீனா வணிக முதலீட்டு கூட்டத்தில் உரையாற்றிய இம்ரான்கான், பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுவானதாகவும், தன்னிறைவு கொண்டதாகவும் மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். பாகிஸ்தானுக்கு நட்பு நாடான சீனா உதவவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தயாராக உள்ளதாக கூறினார். ஆனால் எங்கள் பிரச்சனை நாங்கள் இன்னும் அதற்கு தயாராகவில்லை என கான் தெரிவித்தார்.
Also Read: ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் தாலிபானுக்கும் இடையே மோதல்.. எச்சரித்த தாலிபான்கள்.
1960 ஆம் ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசியமயமாக்கல் செயல்முறை நாட்டின் முன்னேற்றத்தை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக இம்ரான்கான் கூறினார். மேலும் வெங்காயம் காய்கறிகளை மட்டும் ஏற்றுமதி செய்வதால் பொருளாதாரத்தை உயர்த்த முடியாது. தொழில் வளர்ச்சி முக்கியம், தொழில் வளர்ச்சி இல்லாமல் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல முடியாது என இம்ரான்கான் தெரிவித்தார்.
Also Read: மின் பற்றாக்குறையால் இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. மக்கள் போராட்டம்..