பிரிட்டனின் மிகப்பெரிய அச்சுருத்தல் சீனா தான்.. சீனாவின் 30 கன்பியூசியஸ் நிறுவனங்கள் மூடப்படும்: ரிஷி சுனக்

பிரிட்டனின் புதிய பிரதமர் போட்டியில் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவரான ரிஷி சுனக், சீனாவை சமாளிக்க புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாகவும், இங்கிலாந்தில் செயல்படும் 30 கன்பியூசியஸ் நிறுவனங்களையும் தடை செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

பிரதமர் போட்டியில் முன்னணியில் உள்ள ரிஷி சுனக் தனது ட்விட்டர் பக்கத்தில், சீனாவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் பிரிட்டனுக்கும் உலகின் பாதுகாப்புக்கும் இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்தில் உள்ள சீனாவின் கன்பூசியஸ் கல்வி நிறுவனங்கள் 30 யும் மூட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது உலகிலேயே மிக உயர்ந்த எண்ணிகை என அவர் தெரிவித்துள்ளார். பள்ளியில் மாண்டரின் மொழி கற்பித்தலில் கிட்டத்தட்ட அனைத்து இங்கிலாந்து அரசாங்க செலவுகளும் பல்கலைக்கழக அடிப்படையிலான கன்பூசியஸ் நிறுவனங்கள் மூலம் வழிநடத்தப்படுகிறது. இதன் மூலம் சீன மென்மையான சக்தியை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சீன சைபர் தாக்குதலை சமாளிக்கவும், தொழில்நுட்ப பாதுகாப்பில் சிறந்த நடைமுறையை பகிர்ந்து கொள்ளவும் சுதந்திர நாடுகளின் புதிய சர்வதேச கூட்டணியை உருவாக்க உள்ளதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும் சீன தொழில்துறையின் உளவுபார்ப்புகளை எதிர்கொள்வதற்கு பிரிட்டிஷ் வணிகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அதிக ஆதரவை வழங்க, பிரிட்டிஷ் உளவு அமைப்பான MI5 இன் எல்லையை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளார்.

நிறுவனங்கள் தங்கள் அறிவுசார் சொத்துக்களை பாதுகாக்க உதவும் ஒரு கருவிதொகுப்பை உருவாக்க அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு சேவைகளுடன் நாங்கள் பணியாற்றுவோம். நான் முக்கிய பிரிட்டிஷ் சொத்துக்களை பாதுகாப்பேன் என கூறியுள்ளார். அதாவது மூலோபாய ரீதியாக உணர்திறன் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவன்ங்கள் உட்பட முக்கிய பிரிட்டிஷ் சொத்துக்களை சீனர்கள் கையகப்படுத்துவதை தடுக்க வேண்டியதன் அவசியத்தை ஆராய்வது என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

கன்பூசியஸ் நிறுவனங்கள் என்பது சீனாவால் நடத்தப்படும் கலாச்சார ஊக்குவிப்பு அமைப்பாகும். இது சீன கலாச்சாரம் மற்றும் சீன மொழியை ஊக்குவிக்கிறது. கன்பூசியஸ் நிறுவனங்கள் சீன பிரச்சாரத்திற்காக பல நிறுவனங்களுக்குள் ஊடுருவியதாக கூறப்படும் மேற்கத்திய அரசாங்களின் ஆய்வுக்கு உட்பட்டிருந்தன. கன்பூசியஸ் நிறுவனங்களுடன் தொடர்புடைய நபர்கள் மீது உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இத்தகைய கவலைகள் காரணமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பல கன்பூசியஸ் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. தற்போது பிரிட்டனில் கன்பூசியஸ் நிறுவனங்கள் 30 பல்கலைக்கழகங்கள் மற்றும் 150 பள்ளிகளில் உள்ளன. அவர்கள் சீன கலாச்சாரம் மற்றும் சீன மொழியை ஊக்குவிப்பதாக கூறப்பட்டாலும், அவர்கள் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரத்தை தூண்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.