பிரதமர் மோடிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு.. சர்வதேச பிரச்சனைகள் குறித்து ஆலோசனை..

கொரோனா தடுப்பூசி தொடர்பான பிரச்சனைக்கு பிறகு பிரிட்டிஷ் பிரதமர் போரிஷ் ஜான்சன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்.

சில தினங்களுக்கு முன்பு இந்திய பயணிகளுக்கு பிரிட்டன் தனிமைபடுத்துதலை அறிவித்திருந்தது. பிரிட்டன் அங்கிகரித்த 18 நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. ஆனால் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கிகரித்துள்ளது.

இருப்பினும் அங்கிகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லாததால் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்கள் தடுப்பூசி போடாதவர்களாகவே கருதப்படுவார்கள் என கூறி இந்திய பயணிகளுக்கு 10 நாட்கள் தனிமைபடுத்துதலை பிரிட்டன் அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா பதிலடியாக இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் 10 நாட்கள் தனிமைபடுத்த வேண்டும் என அறிவித்தது. இதனால் பிரிட்டன் தனது அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டது.

Also Read: காஷ்மீர் பண்டிட் படுகொலை எதிரொலி.. ஜம்மு காஷ்மீரில் 570 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை..

இந்த நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியுடன் இந்திய தடுப்பூசியை அங்கீகரிப்பது வரவேற்கதக்கது என கூறினார். மேலும் இந்தியா-இங்கிலாந்து 2030 தொடர்பாகவும் விவாதித்தனர்.

Also Read: போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கானின் அனைத்து விளம்பரங்களையும் நிறுத்திய BYJU’S நிறுவனம்..

கிளாஸ்கோவில் நடைபெற இருக்கும் COP-26 காலநிலை மாற்றம் தொடர்பான கருத்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். மேலும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

Also Read: அருணாச்சல் எல்லையில் இந்திய சீன வீரர்களுக்கு இடையே பயங்கர மோதல்..

Leave a Reply

Your email address will not be published.