மோடி அரசாங்கத்தின் கீழ் பௌத்த மதம் மறுமலர்ச்சி அடைந்துள்ளது: சர்வதேச பௌத்த கூட்டமைப்பு

இன்று அபிதம்மா தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் புத்த மதம் பெரும் மறுமலர்ச்சியை இந்தியா கண்டுள்ளது என இலங்கை புத்த துறவி தெரிவித்துள்ளார்.

தேரவாத பாரம்பரியத்தின்படி, புத்தர் தனது தாயாருக்கு அபிதம்ம பிடகாவை கற்பிக்க சொர்கத்திற்கு சென்று, பின்னர் மூன்று மாதங்கள் போதனை எடுத்து அதன் பிறகு புத்தர் மீண்டும் பூமிக்கு திரும்பினார். இந்த நாள் தான் அபிதம்மா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் இலங்கை, மியான்மர், நேபாளம் மற்றும் பூட்டான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஏராளமான புத்த துறவிகள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்வை கொண்டாட புத்த துறவிகள் அனைவரும் உத்திரபிரதேசத்தில் கூடுவார்கள்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை புத்த துறவு வஸ்கடுவ மகிந்தவங்ச மகாநாயக்க தேரர் கூறுகையில், இன்று பௌர்ணமியை முன்னிட்டு சர்வதேச பௌத்த சமூகத்தினர் இந்தியாவில் ஒன்றுகூடி இந்த முக்கிய பண்டிகையை கொண்டாடுகிறோம்.

பிரதமர் மோடி அரசாங்கத்தின் கீழ், இந்தியாவில் பௌத்தம் பெரும் மறுமலர்ச்சியை கண்டுள்ளது. பொத்தம் இரக்கம் மற்றும் மகிழ்ச்சியை பற்றியது. பிரதமர் மோடி சமீபத்தில், பூமியை மோதல் மற்றும் வன்முறையில் இருந்து காப்பாற்ற இந்தியா புத்த மதத்தை உலகிற்கு வழங்கியுள்ளதாக ஐ.நாவில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்த உலகளாவிய பணியை நாங்கள் பாராட்டுகிறோம், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு எங்களை அழைத்த சர்வதேச பௌத்த கூட்டமைப்பு மற்றும் இந்திய அரசிற்கு நன்றியை தெரிவித்துகொள்கிறோம் என இலங்கை துறவி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.