மம்தா பானர்ஜி உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு முழு அதிகாரம்..

முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சட்டத்துறை அமைச்சர் மற்றும் பிற எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு முழு அதிகாரம் இருப்பதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

நாரதா லஞ்ச ஊழல் வழக்கில் திரிணாமுல் கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், ஒரு எம்.எல்.ஏ மற்றும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ உட்பட நான்கு பேரை CBI கைது செய்தது. இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் தொண்டர்கள் கொல்கத்தாவில் உள்ள CBI அலுவலகத்தை முற்றுகையிட்டு கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆறு மணி நேரம் தர்ணா போராட்டத்திவ் ஈடுபட்டார். மேலும் தன்னையும் கைது செய்யுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் நான்கு தலைவர்களையும் வீட்டு காவலில் கைக்ககோரி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதனை எதிர்த்து CBI உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் பீ.ஆர்.கவாய் ஆகியோர் சிபிஐ அலுவலகத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் தொண்டர்கள் முற்றுகையிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினர். சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கவே இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக நீதிபதிகள் கூறினர்.

மேலும் இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இது விசாரணையை சோர்வடைய செய்யும் என நீதிபதிகள் கூறினர். மேலும் முதலமைச்சர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட யார்மீது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு முழு அதிகாரம் இருப்பதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *