இந்துக்களுக்கு எதிரான மலபார் படுகொலை பற்றிய படத்திற்கு சென்சார் சான்றிதழ் மறுப்பு..

திரைப்பட தயாரிப்பாளர் அலி அக்பர் அல்லது ராமசிம்மன் அபூபக்கரின் மலையாள படமான புழ முதல் புழ வாரே என்ற படத்திற்கு கேரள சென்சார் கமிட்டி சான்றிதழ் வழங்க மறுத்துள்ளதாக RSS நிர்வாகி ஜே.நந்தகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த படம் 1921 ஆம் ஆண்டு மோப்லாவில் இஸ்லாமியர்களால் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட மலபார் படுகொலையை பற்றிய படம் என கூறப்படுகிறது. நந்தகுமார் தனது டிவிட்டர் பதிவில், கேரளாவில் இடது-ஜிஹாதி சென்சார் கமிட்டி மோப்லா கலவரத்தின் உண்மையை அம்பலப்படுத்தும் அலி அக்பர் படமான புழா முதல் புழா வரை (நதியிலிருந்து நதி வரை) தணிக்கை சான்றிதழை மறுத்துள்ளது என கூறி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை டேக் செய்துள்ளார்.

அலி அக்பர் மலையாள திரையுலகில் உள்ள ஒரு இயக்குனர் ஆவார். சமீபத்தில் அக்பரும் அவரது மனைவியும் இந்து மதத்திற்கு மாறினர். மேலும் தனது பெயரை ராமசிம்மன் அபூபக்கர் என மாற்றி கொண்டார். அவர் கூறுகையில், 1947 ஆம் ஆண்டு ராமசிம்மன் மற்றம் அவரது குடும்பத்தினர் இந்து மதத்திற்கு மாறியதற்காக இஸ்லாமியர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

ராமசிம்மன், அவரது சகோதரர் தயாசிம்மன், தயாசிம்மன் மனைவி கமலா, அவர்களது சமையல்காரர் ராஜூஐயர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மலப்புரம் மாவட்டம் மலப்பரம்பவில் இஸ்லாமிய ஜிகாதிகளால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். சுதந்திரத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆகஸ்டு 2, 1947 அன்று படுகொலை செய்யப்பட்டனர்.

Also Read: மாலத்தீவில் இந்தியா சார்பாக நடந்த யோகா நிகழ்ச்சியில் தாக்குதல்.. 19 பேரை கைது செய்த போலிசார்.

மலயாள இயக்குனர் அக்பர், CDS ஜெனரல் பிபின் ராவத்தின் மரணத்தை கொண்டாடியவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாத்தை விட்டு விலகுவதாக டிசம்பரில் அறிவித்தார். தனக்கும் தனது குடும்பத்திற்கும் இனி எந்த மதமும் இல்லை என தெரிவித்து தனது பேஸ்புக் பதிவில் கூறியிருந்தார்.

Also Read: குஜராத் கலவர வழக்கில் பொய் சாட்சி அளித்ததாக வழக்கை விசாரித்த முன்னாள் IPS அதிகாரி உட்பட 3 பேர் மீது காவல்துறை FIR பதிவு..

1921 மலபார் இனப்படுகொலை இந்துக்களுக்கு எதிரான ஜிஹாத்தின் திட்டமிட்ட படுகொலை மற்றும் வரியன்குன்னத் குன்ஹாமத் ஹாஜி, அலி முசலியார் போன்றவர்களால் நடத்தப்பட்ட இனப்படுகொலை ஆகும். இதில் 10,000 இந்துக்கள் உயிரிழந்தாகவும். படுகொலையை அடுத்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் கேரளாவை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. பலநூறு இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு பல ஆயிரம் இந்துக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Also Read: கான்பூர் வன்முறை: கல்லெறிபவர்களுக்கு 1,000 ரூபாய்.. பிரியாணி பாபாவை கைது செய்த போலிசார்..

Leave a Reply

Your email address will not be published.