பாகிஸ்தானுக்காக விண்வெளி நிலையத்தை உருவாக்க உள்ளதாக சீனா அறிவிப்பு..

சீனா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள விண்வெளி குறித்த அறிக்கையில், அதன் நட்பு நாடான பாகிஸ்தானுக்கு தகவல் தொடர்பு செயற்கைகோள்களை உருவாக்கவும், பாகிஸ்தானுக்கான விண்வெளி மையத்தை உருவாக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் என தனது அறிக்கையில் சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் மத்திய அமைச்சரைவையால் வெளியிடப்பட்டுள்ள சீனாவின் விண்வெளி திட்டம் 2021 பார்வை என்ற அறிக்கையில், சீனாவின் விண்வெளி துறையின் எதிர்கால விரிவாக்க திட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பாகிஸ்தானுக்காக தகவர் தொடர்பு செயற்கைகோள்களை உருவாக்குவதற்கும், பாகிஸ்தான் விண்வெளி மையத்தை உருவாக்க சீனா முன்னுரிமை அளிக்கும் என அறிகையில் கூறப்பட்டுள்ளது.

சீனா தற்போது சொந்தமாக விண்வெளி மையத்தை அமைத்து வருகிறது. இது இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் முதல் ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைகோள் PRSS-1 மற்றும் சிறிய கண்காணிப்பு கிராஃப்ட் PakTES-1A ஆகிய இரண்டு செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதற்கு சீனா உதவியது.

மேலும் 2019 ஆம் ஆண்டில் இரு நாடுகளும் விண்வெளி ஆய்வு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதுதவிர பாகிஸ்தான் ரிமோட் சென்சிங் செயற்கைகோள்(PRSS-1), வெனிசுலா ரிமோட் சென்சிங் செயற்கைகோள்(VRSS-1), சூடான் ரிமோட் சென்சிங் செயற்கைகோள்(SRSS-1) மற்றும் அல்ஜீரிய ரிமோட் சென்சிங் செயற்கைகோள்(Alcomsat-1) ஆகியவற்றை நிறைவு செய்துள்ளதாக சீனா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியா, அர்ஜென்டினா, பாகிஸ்தான், பிரேசில், கனடா மற்றும் லக்சம்பர்க் போன்ற நாடுகளுக்கு செயற்கைகோள் ஏவுதல் சேவைகளை வழங்கியுள்ளதாக சீனா கூறியுள்ளது. மேலும் ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், அர்ஜென்டினா, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுடன் விண்வெளி தயாரிப்பு மற்றும் தொழிற்நுட்ப ஒத்துழைப்பை நடத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

பொலிவியா, இந்தோ◌னேசியா, நமீபியா, தாய்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுடன் செயற்கைகோள் தரவு பெறும் நிலையங்களை சீனா உருவாக்கியுள்ளது. எகிப்தின் விண்வெளி நகரத்தின் கட்டுமானத்தில் ஒத்துழைப்பிற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனாவும் ரஷ்யாவும் இணைந்து செயல்படுத்தி வரும் சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையம் 2035 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆறு குழுக்கள் கொண்ட பயணத்தின் மூலம் சீனா 11 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

சமீபத்தில் நிலவின் மேற்பரப்பில் இருந்து சீனா மண் மாதிரிகளை சேகரித்து வந்தது. மேலும் செவ்வாயில் ஆறு சக்கர ரோபோவை தரையிரக்கியது. சீனா தற்போது விண்வெளி நிலையத்தை உருவாக்கி வரும் நிலையில், இரண்டு தசாப்தங்கள் பழைமையான சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. கனடா, ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் உட்பட 11 உறுப்பு நாடுகளை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சீனா விளக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.