அணுசக்தியில் இயங்கும் புதியவகை தாக்குதல் நீர்மூழ்கிகப்பலை வடிவமைத்த சீனா..!

சமீபத்தில் கிடைத்த செயற்கைகோள் புகைப்படங்களில், சீன கப்பல் கட்டும் தளத்தில் காணப்பட்ட ஒரு நீர்மூழ்கிக்கப்பல், அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக்கப்பலின் புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட வகையாக இருக்கலாம் என இராணுவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹூலுடாவோ துறைமுகத்தில் ஒரு நீர்மூழ்கிக்கப்பல் காணப்பட்டது. இருப்பினும் இது நீர்மூழ்கிக்கப்பலின் புதிய வடிவமைப்பா அல்லது பழைய கப்பலின் மேம்பாடா அல்லது முற்றிலும் வேறுபட்டதாக என தெளிவாக தெரியவில்லை.

செயற்கைகோள் படங்கள் அணுக்கரு தாக்குதல் நீர்மூழ்கிக்கப்பலை காட்டுகின்றன. பெரிய மற்றும் நீளமான மேலோடு, உந்து விசை அமைப்பை உள்ளடக்கிய பச்சை நிற கவச அமைப்பு, சாதாரண ப்ரொப்பல்லர் அமைப்புகளை விட அமைதியான பம்ப்-ஜெட் உந்துவிசை அமைப்பை கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு பென்டகன் அறிக்கையின் படி, சீன கடற்படை செங்குத்து ஏவுகணை குழாய்கள் கொண்ட புதிய தாக்குதல் நீர்மூழ்கிக்கப்பலை வரும் ஆண்டுகளில் கப்பல் ஏவுகணைகளுக்காக உருவாக்கும் என கூறியிருந்நது. ஏப்ரல் 24 மற்றும் மே 4 க்கு இடையே நீர்மூழ்கிக்கப்பல் தண்ணீரில் இருந்து வெளியேறி பின்னர் மீண்டும் மூழ்கியுள்ளது.

சீனா தற்போது ஆறு 093 SSN வகை அணுசக்தி தாக்குதல் மற்றும் ஆறு 094 SSBN வகை அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக்கப்பல்களை பயன்படுத்தி வருகிறது. 093 SSN வகை நீர்மூழ்கிக்கப்பல் ஆனது YJ-18 கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை ஏவமுடியும். அதேபோல் 094 SSBN வகை நீர்மூழ்கிக்கப்பலானது செங்குத்தாக ஏவப்படும் JL-3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவமுடியும். இவை 10,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்க கூடியது.

Also Read: ரஷ்யா உக்ரைன் மோதல்: கிடப்பில் போடப்பட்ட Su-30 MKI போர் விமான திட்டம்..

2020 பென்டகன் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், சீனா அடுத்த தலைமுறை 096 SSBN என்ற புதிய வகை நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையுடன் பொருத்தப்பட்ட கட்டுமானத்தை 2020ல் தொடங்கும் என கூறியிருந்தது. மேலும் 2025 ஆம் ஆண்டிற்குள் தனது முதல் அணுசக்தியில் இயங்கும் விமானந்தாங்கி கப்பலை பெற இலக்கு வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Also Read: மொரீஷியஸ் அகலேகா தீவில் இந்திய இராணுவ தளம்..? P-8I விமானத்தை நிறுத்த முடிவு..

2030 ஆம் ஆண்டளவில் சீனா ஒரே நேரத்தில் எட்டு 094 மற்றும் 096 வகை நீர்மூழ்கிக்கப்பல்களை இயக்கலாம் என பென்டகன் கூறியுள்ளது. தற்போது சீனா உலகிலேயே மிகப்பெரிய கடற்படையை கொண்டுள்ளது. அமெரிக்காவுடன் போட்டிபோட மிகப்பெரிய கடற்படை தேவைப்படுவதால் தனது கடற்படையை சீனா அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Also Read: 1000 கோடி மதிப்பில் எதிரி இலக்கை கண்டறியும் ஸ்வாதி ரேடாரை வாங்க உள்ள இந்திய இராணுவம்..?

Leave a Reply

Your email address will not be published.