ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அழிக்கும் ஆயுதத்தை உருவாக்கிய சீனா..?

ஒலியை விட ஐந்த மடங்கு வேகத்தில் இலக்கை தாக்கும் ஹைப்பர்சோனிக் கிளைடு ஏவுகணையின் போக்கை மதிப்பிடும் செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக சீன ராணுவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செயற்கை துண்ணறிவு தொழிற்நுட்பத்தால் இயக்கப்படும் அந்த வான் பாதுகாப்பு அமைப்பு, எதிரி ஆயுதத்தின் சாத்தியமான பாதையை மதிப்பிட்டு, மூன்று நிமிடத்திற்கு முன்பே எதிர் தாக்குதலை தொடங்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் இராணுவ சக்திகள் தற்போது ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனத்தின் வளர்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளன. இது வான் மற்றும் விண்வெளி பாதுகாப்பிற்கு கடுமையான சவால்களை கொண்டுவருகிறது என சீன விமானப்படையின் முன் எச்சரிக்கை உளவுத்துறையின் கணினி விஞ்ஞானி ஜாங் ஜூன்பியாவோ தெரிவித்துள்ளார்.

சீன ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் சங்கத்தால் நடத்தப்படும் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஜர்னல் ஆஃப் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸில் ஏப்ரல் 30 அன்று வெளியிடப்பட்ட கட்டுரையில் ஜாங் ஜூன்பியாவோ கூறியதாவது, நோக்க மதிப்பீடு மற்றும் விண்வெளி பாதுகாப்பு இடைமறிப்புகளை எதிர்த்து போராடுவதற்கு பாதை கணிப்பு மிகவும் முக்கியம் என எழுதியுள்ளார்.

ஒரு ஹைப்பர்சோனிக் ஆயுதம் விண்வெளியில் இருந்து தாக்குதலை தொடங்குகிறது. வழக்கமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை போல் இல்லாமல் வளிமண்டலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இடது அல்லது வலப்புறமாக ஆயுதத்தால் பயணிக்க முடியும். இதனால் அதன் தடத்தை அறிவதையும் தாக்குவதையும் கடினமாக்குகிறது.

மேக் 5 அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் செல்லும் ஆயுதங்களை தாக்க வான் பாதுகாப்பு அமைப்பு சிறிது நேரம் எடுத்து கொள்கிறது. ஆனால் தற்போதுள்ள ஹைப்பர்சோனிக் ஏவுகணையை நிறுத்த முடியாது என நம்பப்படுகிறது. ஆனால் இதுபோன்ற சாத்தியமில்லாத பணிகளை செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தால் கையாள முடியும் என ஜாங் கூறியுள்ளார்.

பாதுகாவலர்களுக்கு பொதுவாக எதிரி ஆயுதங்களின் நிறை, அளவு, வடிவம் மற்றும் அதன் நோக்கம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் எதிரிகளின் விமானத்தரவை பகுப்பாய்வு செய்வதன் மூலம் மிகவும் துல்லியமாக யூகிக்க முடியும்.

Also Read: டேங்க் கொலையாளியான TB2 ட்ரோனை தனது விமானத்தளத்தில் நிறுத்தியுள்ள பாகிஸ்தான்..

ஒரு ஏவுகணை எவ்வளவு மேம்பட்டதாக இருந்தாலும் அல்லது வேகமாக இருந்தாலும், சில இயற்பியல் விதிகளுக்கு கிழ்படிய வேண்டும். இது ஒரு இயந்திர கற்றல் அல்காரிதம் எனவே ஹைப்பர்சோனிக் விமானத்தின் ஆரம்ப கட்டங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளில் இருந்து கற்று கொள்ளலாம். மேலும் விமானத்தின் இறுதி கட்டத்தில் மிகவும் சாத்தியமான போக்கை கணக்கிட புதிதாக பெற்ற செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தலாம்.

ஆனால் இது அவ்வளவு எளிதானது அல்ல, முன்னெச்சரிக்கை அமைப்பு மூலம் சேகரிக்கப்பட்ட மூலத்தரவு, செயற்கை நுண்ணறிவுயை குழப்பக்கூடிய சத்தம்மற்றும் அதிக தரவு கணினிகளை செயலிழக்க செய்யும். இதை எதிர்கொள்ள எங்கள் குழு தனித்துவமான ஆழமான கற்றல் அல்காரிதத்தை உருவாக்கியுள்ளது. இது சிக்னல்களில் இருந்து வரும் சத்தங்களை தானாகவே அகற்றும்.

Also Read: பலுசிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது பயங்கர தாக்குதல்.. 8 பாக். வீரர்கள் உயிரிழப்பு..

தற்போது சீனாவும் ரஷ்யாவும் பல வகையான ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்கியுள்ளன. அமெரிக்காவும் கடந்த மாத தொடக்கத்தில் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்தது. மேலும் சீன ஆராய்ச்சியாளர்கள் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை கண்டறிந்து இடைமறிக்கக்கூடிய விண்வெளி அடிப்படையிலான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், ஹைப்பர்சோனிக் வேகத்தில் இயங்க கூடிய சென்சார்கள் அல்லது ஏவுகணைகளை அழிக்ககூடிய உயர் சக்தி வாய்ந்த லேசர்கள் உட்பட பல எதிர் நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளனர்.

Also Read: உலகின் மிகப்பெரிய கடற்போர் பயிற்சியில் பங்கேற்க உள்ள இந்தியா..?

இருப்பினும் இவை இன்னும் ஆராய்ச்சியில் மட்டுமே உள்ளன. இதுதவிர சீன கடற்படை போர்கப்பல்களில் ஒரு புதிய பீரங்கியை நிறுவியுள்ளதாக கூறப்படுகிறது. எதிரி ஏவுகணை வரும் பாதையில் நிமிடத்திற்கு 10,000 ரவுண்டுகள் குண்டுகளை வீசுவதன் மூலம் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வீழ்த்த முடியும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.