இளம் இரத்தத்தை பயன்படுத்தி நீண்ட காலம் வாழ வைக்கும் காட்டேரி ரகசியத்தை கண்டுபிடித்த சீனா..

சீன ஆராய்ச்சியாளர்கள் குழு இளம் ரத்தத்தை எடுத்து வயதான எலிகளுக்கு செலுத்தி அதனை நீண்ட காலம் வாழ வைக்கும் காட்டேரி (Vampire) நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வயதான முதியோர்களை மீண்டும் இளமையாக மாற்ற முடியும் என கூறப்படுகிறது.

சீன அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு புதிய ஆய்வில், பழைய இரத்தமானது இளம் எலிகளின் பல்வேறு உறுப்புகள் மற்றும் உயிரணு வகைகளின் வயதை அதிகப்படுத்துகிறது. ஆனால் இளம் ரத்தம் வயதான எலிகளின் உடலுக்குள் செலுத்துவதன் மூலம் வயதான ஸ்டெம் செல்கள் மற்றும் சோமாடிக் செல்களை புத்துணர்ச்சியடைய செய்கிறது.

ஹீமாடோபாய்டிக் ஸ்டெம் மற்றும் புரோஜெனிட்டர் செல்கள் (HSPCs), பிற இரத்தம் மற்றும் நோயெதிர்ப்பு உயிரணுக்களுக்கு வழிவகுக்கும் ஸ்டெம் செல்கள் மற்றும் இளம் இரத்தத்திற்கு மிகவும் உணர்திறன் கொண்ட செல்கள் என விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த ஆய்வு கடந்த செவ்வாய் கிழமை செல் ஸ்டெம் செல் என்ற இதழில் வெளியிடப்பட்டது.

வயதான செயல்முறையை புரிந்து கொள்வதற்கு விஞ்ஞானிகள் ஹெட்டோரோரோனிக் பரபயோசிஸ் என்ற நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இதில் ஒரு இளம் எலியும் ,ஒரு வயதான எலியும் சோதனை செய்யப்படுகின்றன. இதில் திசுக்கள் மற்றும் உறுப்புகள் ஒரு முறையான மட்டத்தில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.

Also Read: துருக்கி நாட்டின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்.. ஐ.நா ஒப்புதல்.. புதிய பெயர் என்ன தெரியுமா..?

2005 ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு வயதான எலிகளின் தசைகள் மற்றும் கல்லீரல்களில் ஒரு மாதத்திற்கு இளம் இரத்தத்தை கொடுத்த பிறகு புத்துணர்ச்சிக்கான அறிகுறிகளை கண்டறிந்தனர். இந்த ஆய்வில், சீன ஆராய்ச்சியாளர்கள் 5 ஆண்டுகளில் 7 உறுப்புகளில் உள்ள 1,64,000 க்கும் மேற்பட்ட ஒற்றை செல்களை தனிமைப்படுத்தி ஒப்பிட்டு பார்த்துள்ளனர்.

Also Read: எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைகோள்களை அழிக்க சீனா உருவாக்கி வரும் ஆயுதம்..?

இளம் HSPCs க்களை எலும்பு மஜ்ஜையில் இடமாற்றம் செய்வதை விட வயதான HSPCs க்களை செயல்படுத்துவதால் வயதான எலிகளில் புத்துணர்ச்சி ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவை தளமாக கொண்ட ஸ்டார் அப் நிறுவனமாக அம்ப்ரோசியா, ஒரு இளம் நன்கொடையளரிடமிருந்து மனித பிளாஸ்மாவை மாற்றியமைத்தது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், இது பாதுகாப்பனது அல்ல மற்றும் பயனுள்ளது அல்ல என விமர்சித்து இருந்தது.

Also Read: மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளி வாகனத்தை விரைவில் சோதனை செய்ய உள்ள இஸ்ரோ..

Leave a Reply

Your email address will not be published.