ஐக்கிய அமீரகத்தில் அந்நாட்டிற்கு தெரியாமலேயே ரகசியமாக கடற்படை தளம் அமைத்து வரும் சீனா..

ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்நாட்டிற்கே தெரியாமல் சீனா கட்டி வந்த துறைமுக கட்டுமான பணிகளை அமெரிக்காவின் தலையீட்டால் சீனா தற்போது நிறுத்தி உள்ளது. இது சீனாவின் கடற்படை தளம் என அமெரிக்கா எச்சரித்ததால் அமீரகம் கட்டுமானத்தை நிறுத்தி உள்ளது.

தலைநகர் அபுதாபி அருகே இருக்கும் கலீஃபா துறைமுகத்தை சீன கப்பல் கட்டும் நிறுவனமான காஸ்கோவால் சரக்கு முனையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த துறைமுகத்தை சீனா இலங்கை மற்றும் பாகிஸ்தான் துறைமுகத்தை போலவே குத்தகைக்கு எடுத்துள்ளது.

ஆனால் கலீஃபா துறைமுகத்தின் வடிவமைப்பு சாதாரண சரக்கு துறைமுகத்தை போல் அல்லாமல் கடற்படை தளத்தை ஒத்து இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. சாட்டிலைட் மூலம் அமெரிக்க உளவுத்துறை இந்த கட்டுமான பணிகளை கண்டறிந்துள்ளது.

இதனை அடுத்து அமெரிக்க அதிகாரிகள் அபுதாபியின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு சீனா கட்டிவரும் கடற்படை தளங்கள் குறித்து விவாதித்து உள்ளனர். பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல்-நஹ்யானை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

சீனா அதன் முதல் வெளிநாட்டு கடற்படை தளத்தை ஆப்ரிக்க நாடான டிஜிபூட்டியில் அமைத்துள்ளது. அங்கேயும் முதலில் வர்த்தக துறைமுகத்தை அமைப்பதாக கூறி பின்னர் அதனை தனது கடற்படை தளமாக மாற்றியுள்ளது. அதன் இரண்டாவது கடற்படை தளத்தை கென்யாவில் அமைத்து வருகிறது.

அதேபோல் இலங்கையின் ஹம்மந்தோட்டா மற்றும் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தையும் தற்போது சீனா வர்த்தகத்திற்காக பயன்படுத்தி வந்தாலும் எதிர்காலத்தில் அதனை தனது கடற்படை தளமாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் சீனா அந்த துறைமுகத்தை கட்டும் போது கடற்படை தளத்திற்கு ஏற்றவாறு கட்டமைத்துள்ளது.

Also Read: நாட்டை நடத்துவதற்கு அரசிடம் போதுமான நிதி இல்லை.. மாநாட்டில் குமுறிய இம்ரான்கான்..

இதனால் சீனாவின் போர் கப்பல்கள் இந்த துறைமுகத்திற்கு எளிதாக வந்து செல்ல முடியும். இந்நிலையில் அமெரிக்க அதிபர் மற்றும் அமீரகத்தின் இளவரசர் இடையிலான பேச்சுவார்த்தையை அடுத்து சீனாவின் கட்டுமானப்பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சீனா ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகமாக முதலீடு செய்துள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து சீனா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இந்த நிலையில் கலீஃபா துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்து அதனை சீனா பயன்படுத்தி வருகிறது.

Also Read: பாகிஸ்தானை தொடர்ந்து அதன் நட்பு நாடான துருக்கியையும் சாம்பல் நிற பட்டியலில் சேர்த்தது FATF..?

ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சீனா இடையே எந்த இராணுவ ஒப்பந்தமும் கிடையாது. சீனாவிற்கும் எமிரேட்சிற்கும் எந்த பிரச்சனை இல்லை என்றாலும் சீனா ஐக்கிய அரபு எமிரேட்சின் எதிரி நாடான ஈரானுடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் அமெரிக்கா இடையே நல்ல நட்பு உள்ளது. இதனால் அதிபர் ஜோ பிடன் உடனான பேச்சுவார்த்தையை அடுத்து துறைமுகத்தில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை அமெரிக்க அதிகாரிகள் நேரில் சென்று உறுதி செய்தனர்.

Also Read: சீனாவை தாக்கிய குட்டி யானை.. இந்தியா தான் காரணம் என சீனா கதறல்..

Leave a Reply

Your email address will not be published.