சீனா ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்து இருக்கிறது: அமெரிக்கா அறிக்கை

சீனா கடந்த ஜூலை மாதம் ஹப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளதாக அமெரிக்காவின் கூட்டுத்தலைவர்களின் துணைத்தலைவர் ஜெனரல் ஜான் ஹைட்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவ அதிகாரி ஹைடன் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், சீனா ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. சீனா நீண்ட தூர ஏவுகணையை ஏவியது, அந்த ஏவுகணை பூமியை குறைந்த சுற்றுப்பாதையில் வட்டமிட்டு ஒரு ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனத்தை இறக்கி விட்டு சீனாவுக்கு திரும்பியுள்ளது என கூறினார்.

சீனா ஒரு நாள் அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம். அது ஏவுகணை சோதனையில் இலக்கை தவற விட்டு இருந்தாலும் இலக்கிற்கு அருகில் சென்று தாக்கியுள்ளது. உலகில் எந்த ஒரு நாடும் பூமியை சுற்றி வந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை செய்தது இல்லை, இதுவே முதல் முறை.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிப்பதால் அவற்றை ரேடாரால் கண்டறிவது கடினம். சீனா நூற்றுக்கும் மேற்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை செய்துள்ளது. ஆனால் அமெரிக்க ஒன்பது சோதனைகளை மட்டுமே செய்துள்ளது.

Also Read: போட்டியில் இந்தியாவின் தேஜஸ்.. தேஜஸ் போர் விமானத்தை வீழ்த்த சீனா போட்ட திட்டம்..

அமெரிக்கா இன்னும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை களமிறக்கவில்லை. ஆனால் சீனா வெற்றிகரமாக சோதனை செய்துவிட்டது என ஹைடன் கூறினார். மேலும் சீனா அதிக அணு ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் சீனாவிடம் ஆயிரம் அணு ஆயுதம் இருக்கும் என பென்டகன் தெரிவித்துள்ளது.

Also Read: விண்வெளியில் சாட்டிலைட்டை தாக்கி அழித்த ரஷ்யா.. அமெரிக்கா எச்சரிக்கை..

ஆனால் ஏவுகணை சோதனை நடத்திய போது சீன செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், இது ஏவுகணை அல்ல, இது ஒரு விண்கலம். சீனா ஹைப்பர்சோனிக் ஏவுகணை எதையும் சோதனை செய்யவில்லை. விண்கலத்தின் மறுபயன்பாட்டின் தொழிற்நுட்பத்தை சரிபார்க்க நடத்தப்பட்ட வழக்கமான சோதனை என கூறினார்.

Also Read: துபாய் ஏர் ஷோ 2021.. வானில் பறந்த இந்தியாவின் தேஜஸ்.. பின்வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்..

Leave a Reply

Your email address will not be published.