பூட்டானை ஆக்கிரமித்து வரும் சீனா.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..

சீனா அண்டை நாடான பூட்டானை பல ஆண்டுகளாக படிப்படியாக திருட்டுதனமாக ஆக்கிரமித்து வருவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் கூறுகையில், பூட்டானிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் சீனா சாலைகள், மின் உற்பத்தி நிலையம், தகவல் தொடர்பு தளங்கள் மற்றும் இராணுவ தளம் உள்ளிட்ட பல கட்டிடங்களை கட்டி வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவை வெறும் 8 லட்சம் மக்கள் தொகை கொண்ட பூட்டானால் எதிர்க்க முடியாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் பூட்டானின் பெரும்பகுதியை சீனா ஆக்கிரமித்து வருகிறது. திபெத்தை போன்ற புத்த பூமியான பூட்டானும் அமைதியான நாடாகும். அந்த நாட்டிற்கு பெரிய அளவில் இராணுவ பலம் இல்லை.

மேலும் சீனாவிற்கு பூட்டானில் தூதரகம் கூட கிடையாது. பூட்டானை இந்திய இராணுவமே பாதுகாத்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு பூட்டானின் டோக்லாம் பகுதியை சீனா ஆக்கிரமிக்க முயன்ற போது இந்திய இராணுவம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இந்தியா சீனா இடையே மோதல் போக்கு உருவானது.

இந்த நிலையில் பூட்டானின் 470 கிலோமீட்டர் எல்லையில் சில பகுதிகளை வலுகட்டாயமாக சீனா ஆக்கிரமித்து வருவதாக ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அடிக்கடி இதுபோல் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதால் சீனா, பூட்டான் இடையே பெச்சுவார்த்தையும் நடைபெறும். இந்த நிலையில் தற்போது 25வது பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சீனா பூட்டானின் நிலபரப்பில் 12 சதவீத பகுதியை உரிமை கோருகிறது. ஆனால் சீனா பூட்டானின் பகுதியில் ஒரு நகரத்தையே உருவாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கியாலபக் என்று அழைக்கப்படும் அந்த பகுதியில் சில நூறு பேர் தங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

1998 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை சீனா மீறி வருவதாக பூட்டான் குற்றம் சாட்டி உள்ளது. 1980 வரைபடத்தின் படி கியாலபக் சீனாவின் பகுதியில் இருந்ததாக சீன தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சீனா இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை குறிவைத்தே பூட்டானில் எல்லை மீறுவதாகவும், சீனாவின் உண்மையான இலக்கு இந்தியா தான் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *