கிரீன்லாந்தை கடன் வலையில் வீழ்த்தும் சீனா.. முட்டுக்கட்டை போடும் டென்மார்க்..

வட அமெரிக்க நாடான கிரின்லாந்து, சீனாவின் கடன் பொறியில் விரைவில் சிக்கலாம் என கூறப்படும் நிலையில், சீனா உடனான திட்டதை ரத்து செய்து வருகிறது. கிரின்லாந்து ஒரு முழுமையான சுதந்திர நாடு கிடையாது. அதே நேரம் அது எந்த நாட்டின் ஒரு பகுதியும் கிடையாது.

கிரின்லாந்து சுதந்திரத்தை அறிவிக்கும் உரிமையுடன் டென்மார்க் இராச்சியத்தில் ஒரு அரை-தன்னாட்சி பிரதேசமாக உள்ளது. கிரின்லாந்து மக்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். அங்கு ஆளும் கட்சியும் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் அந்த நாடு இன்னும் சுதந்திரத்தை அறிவிக்கவில்லை.

ஏனென்றால் கிரின்லாந்து சீனாவின் கடன் பொறியில் இருந்து மீண்ட பிறகு சுதந்திரத்தை அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. அதற்கு முன்னரே சுதந்திரத்தை அறிவித்தால் சீனா எளிமையாக அந்நாட்டை கடன் வலையில் வீழ்த்தி விடும் அந்நாடு நினைக்கிறது. கிரின்லாந்தின் நுக் (Nuuk) விமானநிலைய விரிவாக்கத்தின் போது சர்ச்சை வெடித்தது.

விமானநிலைய விரிவாக்க திட்டத்தை அறிவித்தபோது, சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனமான சீன கம்யூனிகேஷன் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி (CCCC) முழு திட்டத்திற்கும் நிதி அளிக்க முன்வந்தது. ஆனால் இது சீனாவின் கடன் வலை திட்டம் என்பதை உணர்ந்த டென்மார்க் கட்டுமான மசோதாவில் 33 சதவீதமான 109 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்க ஒப்புகொண்டது. முழுமையாக கைப்பற்ற நினைத்த சீனா டென்மார்க்கின் தலையீட்டால் அந்த திட்டத்தை கைவிட்டது.

கிரின்லாந்து பனியால் மூடப்பட்ட ஒரு ஐஸ் பிரதேசமாகும். அது பெரிய பொருளாதார நாடு கிடையாது. ஆனால் கிரீன்லாந்தின் மொத்த நிலபரப்பு 2 மில்லியன் சதுர கிலோமிட்டர் ஆகும். டென்மார்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து, போர்ச்சுக்கல், பெல்ஜியம், போலந்து, அயர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் இங்கிலாந்தை விட பரப்பளவில் பெரியது. அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 57,000 மட்டுமே. பிரதான தொழில் என்றால் அங்கு மீன்பிடி மற்றும் சுற்றுலா மட்டுமே உள்ளது.

மேலும் டென்மார்க் ஆண்டுக்கு 614 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறது. மீன் மற்றிம் சரக்கு ஏற்றுமதிக்காக 3 விமானநிலையங்களை கிரின்லாந்து மேம்படுத்தி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு நர்சாக் நகருக்கு அருகில் குவான்னர்சூட்டில் உள்ள அரிய யுரேனிய சுரங்க திட்டத்தை கைப்பற்றும் நோக்கில் சீனா ஒரு ஆஸ்திரேலிய நிறுவனத்துடன் இணைந்து பார்வையிட்டது. அதன் பிறகு ஆட்சியில் இருந்த IA கட்சி அரசாங்கம் திட்டத்தை கைவிட்டது.

Also Read: சீனாவிற்கு செல்லும் எரிவாயு கப்பல்களை ஐரோப்பாவிற்கு திருப்பும் பிரான்ஸ்..

மேலும் கிரீன்லாந்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதால் சீனாவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது சீனாவின் கையில் இருக்கும் ஒரே பெரிய திட்டம் செயலில் உள்ள சிட்ரோனென் ப்ஜோர்டில் துத்தநாக சுரங்க திட்டமாகும். இந்த திட்டத்தில் இருந்தும் சீனாவை வெளியேற்ற கிரீன்லாந்து அமெரிக்காவை முதலிடு செய்ய வைக்க முயன்று வருகிறது. இதனால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் சீனா முழுமையாக கிரீன்லாந்தை விட்டு வெளியேறலாம் என கூறப்படுகிறது.

கிரீன்லாந்து சுதந்திரம் அடைந்தால் அதிக அளவில் முதலீடு செய்து கிரீன்லாந்தை தனது கட்டுபாட்டில் கொண்டு வரலாம் என சீனா நினைத்தது. ஏனெனில் வட அமெரிக்க நாட்டில் தனது இராணுவ தடத்தை பதிப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு அச்சுருத்தல் கொடுக்க சீனா முயற்சித்து வருகிறது. மேலும் ஆர்டிக் பிரதேசத்தில் காலநிலை மாற்றத்தால் ஐஸ் வேகமாக உருகி வருவதால் எதிர்காலத்தில் ஒரு முக்கிய கடல் போக்குவரத்து மையமாக ஆர்டிக் பிரதேசம் மாறும் என சீனா கணித்து அங்கு முதலீடு செய்து வருகிறது.

Also Read: சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தில் இருந்து விலகும் தாய்லாந்து..?

மேலும் ஆர்டிக் உருகி உலகளாவிய போக்குவரத்து மையமாக மாறும்போது அங்கு தனது இராணுவ தளத்தை நிறுவி அமெரிக்காவுக்கு அச்சுருத்தல் கொடுக்கவும், வட அமெரிக்க நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடவும் முயன்று வருகிறது. இதனால் தான் சீனா கிரீன்லாந்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளது. இருப்பினும் சீனாவின் திட்டத்தை உணர்ந்த கிரீன்லாந்து, சீனாவின் கடனை அடைக்கும் வரை வேண்டும் என்றே சுதந்திரத்தை காலம் தாழ்த்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.