பாலைவனத்தில் போர்கப்பலை மறைத்து வைத்து இரகசியமாக போர்பயிற்சியில் ஈடுபடும் சீனா..
சீனாவின் தென்மேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தின் தக்லமாகன் பாலைவனத்தில் அமெரிக்காவின் மாதிரி போர்கப்பல்களை உருவாக்கி பயிற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சமீப காலமாக தைவான் மற்றும் சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. தைவானை சீனாவுடன் இணைத்தே தீருவோம் என சீனா கூறியுள்ளது. அவ்வபோது தைவான் வான்பரப்பில் தனது போர் விமானத்தை செலுத்தி வருகிறது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகும் நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் சீனா தைவானை தாக்கினால் அமெரிக்கா தைவானை பாதுகாக்கும் என வெளிப்படையாக கூறி உள்ளார். இதனால் தற்போது அமெரிக்கா மற்றும் சீனா இடையே மோதல் உச்ச கட்டத்தில் உள்ளது.
ஒருவேளை அமெரிக்காவை எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்தால் அதனை எப்படி சமாளிக்க வேண்டும் என அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல் மற்றும் நாசக்கார போர் கப்பலின் மாதிரி கப்பலை உருவாக்கி சீனா போர் பயிற்சி மேற்கொண்டு வருவதாக அமெரிக்காவின் அமெரிக்க கடற்படை இன்ஸ்டிடியூட் (USNI) தகவல் வெளியுட்டுள்ளது.
பாலைவனத்தில் ஒரு ரயில் பாதையில் இந்த போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேறு இடத்தில் கட்டப்பட்டு பாலைவனத்திற்கு கொண்டு வரப்பட்டதா இல்லை பாலைவனத்தில் கட்டப்பட்டு கடலுக்கு செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை.
Also Read: கென்யாவில் தனது இரண்டாவது இராணுவ தளத்தை அமைத்து வரும் சீனா..? இந்தியாவை தாக்க திட்டமா..?
பொதுவாக கப்பலில் போர் பயிற்சி மேற்கொண்டால் அது கடலில் மட்டுமே நடைபெறும். கடலின் தன்மையை பொறுத்து ஒவ்வொரு இடத்திலும் போர் பயிற்சி மாறுபடும். ஒரு சில இடத்தில் நீரின் அடர்த்தி அதிகமாக இருக்கும் மற்றும் ஆழம் வேறுபடும். ஆனால் பாலைவனத்தில் நிறுத்தி வைத்து சீனா என்ன செய்கிறது என தெரியவில்லை. கடலில் கப்பல்கள் அசைந்து கொண்டே இருக்கும்.
Also Read: எதிரிகளின் விமானதளங்களை தாக்கி அளிக்கும் SAAW ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..
ஆனால் பாலைவனத்தில் நிலையாக ஒரே இடத்தில் உள்ள கப்பலை வைத்து கொண்டு சீனா போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் சீனா விமானந்தாங்கி கப்பலை தாக்கி அழிக்கும் DF-21D ஏவுகணையை வைத்து பயிற்சி மேற்கொண்டு வருவதாக USNI தெரிவித்துள்ளது. மேலும் தரை மற்றும் கடலில் போர்கப்பலை தாக்கி அழிக்கும் DF 26-R பாலிஸ்டிக் ஏவுகணை மூலமாகவும் பயிற்சி எடுப்பதாக கூறப்பட்டுள்ளது.
Also Read: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘துஷீல்’ போர்கப்பல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.