சீனா, சாலமன் தீவு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து.. அமெரிக்கா எச்சரிக்கை..
சீனாவும் சாலமன் தீவும் ஒரு பரந்த அளவிலான பாதுகாப்பு ஒப்பபந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் சீன கடற்படை தெற்கு பசிபிக் பகுதியில் கால் பதிக்க வாய்ப்புள்ளது. சாலமன் தீவின் இந்த நடவடிக்கையால் அமெரிக்கா சாலமன் தீவை எச்சரித்துள்ளது.
செவ்வாய் அன்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், சீனா மற்றும் சாலமன் தீவுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தில் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டதாக கூறியுள்ளார்
இருப்பினும் இந்த ஒப்பந்தம் எப்போது எங்கு கையெழுத்தானது என குறிப்பிடவில்லை. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தின் படி, ஆஸ்திரேலியாவின் கடற்கரையிலிருந்து 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசிபிக் பகுதியில் சீனா தனது கடற்படையை நிறுத்த அனுமதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Also Read: மென்பொருள் சேவை துறையில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும் என அறிக்கை..!
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சாலமன் தீவுகளுக்கு சீனா இராணுவ படைகளை அனுப்புவதற்கு கதவை திறந்து விடுகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் சாலமன் தீவுகளுக்குள் ஸ்திரமின்மையை அதிகரிக்கலாம் என கூறியுள்ளார்.
ஆனால் இதனை மறுத்த சாலமன் பிரதமர் மனாசே சோகவரே சீனாவை இங்கு இராணுவ தளம் கட்ட அனுமதிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தைவான் உடனான இராஜதந்திர உறவை ரத்து செய்து சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை தொடர்ந்தது சாலமன்.
Also Read: மோசடியில் ஈடுபட்ட 40 சீனர்கள் உட்பட 150 பேர் மீது FIR பதிவு செய்த மும்பை போலிஸ்..?
அதன் பிறகு சீன சார்பு நிலையை கண்டித்து சாலமன் தீவுகளில் போராட்டம் வெடித்தது. பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டகாரர்கள் ஹொனியாராவின் உள்ள சைனா டவுனின் பெரும் பகுதியை போராட்டகாரர்கள் எரித்தனர். இந்த நிலையில் சாலமன் தீவு சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் மீண்டும் போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.