இந்தியாவிற்கு போட்டியாக பிலிப்பைன்ஸுக்கு இராணுவ உபகரணங்களை வழங்கிய சீனா..

இந்தியா உடனான பிரம்மோஸ் ஒப்பந்தத்திற்கு பதிலடியாக பிலிபைப்பைஸூக்கு 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள உபகரணங்களை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது. சூப்பர்சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பின் மூன்று பேட்டரிகளை வாங்குவதாக பிலிப்பைன்ஸ் அறிவித்த 2 நாட்களுக்கு பிறகு ஜனவரி 16 அன்று சீனா இந்த உபகரணங்களை வழங்கியுள்ளது.

சமீபத்தில் இந்தியா பிலிப்பைன்ஸிடமிருந்து 375 மில்லியன் மதிப்பிலான பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற்றது. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் இந்தியா பக்கம் நெருங்குவதை தடுக்கும் பொருட்டு 20 மில்லியன் டாலர் மதிப்பிலான உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

சீனா வழங்கிய பாதுகாப்பு உபகரணங்களில், மீட்பு மற்றும் நிவாரண உபகரணங்கள், ட்ரோன் அமைப்புகள், டிடெக்டர்கள், நீர் சுத்திகரிப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், எக்ஸ்ரே இயந்திரங்கள், வெடிக்கும் ஆயுகங்களை அகற்றும் ரோபோக்கள், வெடிகுண்டுகளை அகற்றும் உடைகள், பொறியியல் உபகரணங்கள், போக்குவரத்து வாகனங்கள், டம்ப் ட்ரக்குகள், போர்க்லிப்ட்ஸ் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் ஆகியவை வழங்கியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சீன அதிகாரி ஜெனரல் வெய் பெங்கே, பிலிப்பைன்ஸ் பயணத்தின் போது அளித்த உறுதிமொழியின் ஒரு பகுதியே இந்த நன்கொடை என கூறப்பட்டுள்ளது. இதுதவிர இரண்டாவது தொகுதி ராணுவ உபகரணங்கள் விரைவில் வழங்கப்படும் என சீனா கூறியுள்ளது.

2016 ஆம் ஆண்டு தென்சீனக்கடலில் பிராந்திய உரிமைகள் மீதான சீனாவின் கோரிக்கைகளை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்த போதும் சீனாவுடன் மென்மையான போக்கையே பிலிப்பைன்ஸ் அதிபர் கடைபிடித்து வந்தார். இந்தநிலையில் 2021 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அதன் பொருளாதார மண்டலத்திற்குள் சீனாவிடம் இருந்து நிறைய அச்சுருத்தல்களை எதிர்கொண்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஜுலியன் பெலிப் ரீப் தீவில் ஏராளமான சீன கப்பல்கள் குவிந்தன. அதன் பிறகு நவம்பர் மாதத்தில் ஷோலுக்கு செல்லும் வழியில் சீன கடலோர காவல் படை பிலிப்பைன்ஸ் படகுகளை நிறுத்தி நீர் பீரங்கிகளை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.