IPv6 இணைய நெட்வொர்க் மூலம் வளரும் நாடுகளை குறிவைக்கும் சீனா..?

பின்தங்கிய நாடுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் தற்போதைய இணைய கட்டமைப்பை மாற்றுவதற்கு சீனா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஹூவாய் உருவாக்கிய IPv6+ யை சட்டப்பூர்வமாக்க சீனா சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) உதவியை நாடியுள்ளது.

தனியார் நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தும் மற்ற தரநிலைப்படுத்துதல் அமைப்புகளுக்கு மாற்றாக, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் அரசாங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே சீனா இந்த ITU வை பயன்படுத்தி இணையத்தின் மீது வலுவான அரசாங்க கட்டுப்பாட்டை நிலைநிறுத்துவதில் ஒரே நிலைபாட்டை கொண்ட நாடுகளை ஈர்க்கிறது.

கடந்த 2019 செப்டம்பர் மாதம், சீன தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் பிரதிநிதி ஒரு புதிய இன்டர்நெட புரோட்டோகால் (IP) க்கான ஒரு திட்டத்தை முன்வைத்தார். ஆனால் அப்போது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஹூவாய் நிறுவனத்திற்கு இடையேயான மோதலால் திட்டம் கைவிடப்பட்டது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சீன அரசாங்கம், ஓரு தீர்மானத்தின் மாற்றத்தை வெளியிட்டது. அது IPv6+ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. இது IPv6 என பரவலாக அறியப்படும் இணைய நெறிமுறையின் மேம்பட்ட பதிப்பு என கூறியது. இந்த IPv6+ ஹூவாய் நிறுவனத்தால் விளம்பரப்படுத்தப்பட்டது. இது ஹூவாய் நிறுவனத்தால் ஊக்குவிக்கப்பட்ட அதே IP திட்டமாகும்.

இணைய நெறிமுறையின் மிக சமீபத்திய பதிப்பான IPv6 ஆனது, நெட்வொர்க்குகளில் உள்ள கணினிகளுக்கான அடையாளம் மற்றும் இருப்பிட அமைப்பை வழங்குகிறது மற்றும் இணையம் முழுவதும் தரவை விநியோகம் செய்கிறது. இது இன்டர்நெட் புரோட்டோகால் பதிப்பு 6 (IPv6) என அழைக்கப்படுகிறது.

IPv6+ ஆனது, மிகவும் திறந்த மற்றும் செயலில் உள்ள தொழிற்நுட்பம் மற்றும் சேவை கண்டுபிடிப்பு, மிகவும் திறமையான மற்றும் நெகிழ்வான நெட்வொர்க்கிங் மற்றும சேவை வழங்கல், சிறந்த செயல்திறன் மற்றும் பயனர் அனுபவத்தை உணர முடியும் என கூறப்படுகிறது.

Also Read: மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளி வாகனத்தை விரைவில் சோதனை செய்ய உள்ள இஸ்ரோ..

இந்த IPv6+ மூன்று முக்கியமான விஷயங்களை கொண்டுள்ளன. நெட்வொர்க் முழுவதும் தகவல்களின் மிகவும் திறமையான ஒதுக்கீடு, நெட்வொர்க் வளங்களை ஒழுங்கமைக்க அனுமதிக்கும் பிற தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் புதுமையான தீர்வுகளின் ஒருங்கிணைப்பு ஆகும். சுருக்கமாக ஒரு சிறந்த கண்காணிப்பு அமைப்பு என கூறலாம்.

Also Read: எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைகோள்களை அழிக்க சீனா உருவாக்கி வரும் ஆயுதம்..?

ஹூவாய் முன்பு அறிமுகப்படுத்திய IP மற்றும் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள IPv6+ இரண்டும் ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டுள்ளன. அவை தனியுரிமை மற்றும் தணிக்கை அடிப்படையில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இந்த IPv6+ ஆனது IPv6 போன்ற தொழில்நுட்ப தரநிலை அல்ல, மாறாக இது ஒரு பெறுநிறுவன தயாரிப்பு என்பதால், சீனாவின் முன்மொழிவு, மார்க்கெட்டிங் மொழியை தவறாக வழிநடத்துகிறது.

Also Read: இளம் இரத்தத்தை பயன்படுத்தி நீண்ட காலம் வாழ வைக்கும் காட்டேரி ரகசியத்தை கண்டுபிடித்த சீனா..

இதனால் ஐரோப்பிய நாடுகள் சீனாவின் புதிய IPv6+ நெட்வொர்க்கிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல பின்தங்கிய நாடுகள் IPv4 யை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பா ஆப்ரிக்க நாடுகள். சீனா ஆப்ரிக்க நாடுகளை குறிவைத்து IPv6+ நெட்வொர்க்கை முன்னெடுத்து வருகிறது. சுருக்கமாக சொன்னால் IPv6+ பயன்படுத்துவதன் மூலம் நமது இணையத்தின் கட்டுப்பாடு சீனாவிற்கு சென்றுவிடும்.

Leave a Reply

Your email address will not be published.