இந்தியாவில் சிப் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தைவானுடன் பேச்சுவார்த்தை.. எச்சரிக்கும் சீனா..

இந்தியாவில் சிப் தயாரிப்பதற்கான தொழிற்சாலை அமைக்க இந்தியா மற்றும் தைவான் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் குறைகடத்தி தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் தைவான் இடையே நடைபெறும் இந்த பேச்சுவார்த்தை சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்மாட்போன் முதல் மின்சார கார்கள் வரை குறைகடத்திகளின் தேவை அதிகமாக உள்ளது. இந்தியாவில் 7.5 பில்லியன் டாலர் மதிப்பில் சிப் தொழிற்சாலை அமைப்பதற்காக தைவானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தியா தற்போது தனது சிப் தேவையை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்து வருகிறது. இந்தியாவின் சிப் இறக்குமதி 24 பில்லியன் டாலராக உள்ளது. இது 2025 ஆண்டு 100 பில்லியன் டாலரை எட்டும் என கூறப்படுகிறது. மேலும் சிப் தொழிற்சாலை அமைப்பதற்கு தேவையான நிலம், நீர் மற்றும் தேவையான வேலை ஆட்களும் உள்ளனர்.

மேலும் தொழிற்சாலை அமைப்பதற்கு 50 சதவீதம் நிதஉதவி மற்றும் வரிச்சலுகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவுக்கு எதிராக இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் பதிலடி கொடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த கூட்டத்தில் சிப் உற்பத்தி தொடர்பாக பேசப்பட்டது.

Also Read: பின்னடைவில் சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டம்.. சீனா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து வரும் ஆப்ரிக்க நாடுகள்..

தைவானை சீனா உரிமை கொண்டாடி வருவதால் தைவானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள சில நாடுகள் தயக்கம் காட்டின. தற்போது இந்தியா சிப் உற்பத்தி தொடர்பாக தைவானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. உலக நாடுகளுக்கு தைவான் தான் சிப் உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. தற்போது கொரோனா தொற்றால் இதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

Also Read: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆதரவு..

இந்த நிலையில் இந்தியாவிலேயே சிப் உற்பத்தி தொழிற்சாலையை இந்தியாவிலேயே அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சீனாவுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இந்தியா தைவானுடன் நெருக்கம் காட்டி வருகிறது. கடந்த வருடம் இரண்டு பாஜக அமைச்சர்கள் தைவான் நாட்டிற்கு சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: சர்வதேச அணுசக்தி அமைப்பு தேர்தல்.. ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெற்றி..

Leave a Reply

Your email address will not be published.