குளிர்கால ஒலிம்பிக் புறக்கணிப்பு.. அதற்கான விலையை கொடுக்க நேரிடும் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை..

அமெரிக்கா சீன குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பதாக கூறி உள்ள நிலையில் அதற்கான விலையை அமெரிக்கா கொடுக்க நேரிடும் என சீனா எச்சரித்துள்ளது. சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 முதல் 20 ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, பொய்கள் மற்றும் வதந்திகளின் அடிப்படையில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் தலையிடும் அமெரிக்காவின் முயற்சியானது, அதன் கெட்ட நோக்கங்களை மட்டுமே அம்பலப்படுத்தும் என கூறியுள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியானது, அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் பேசக்கூடிய மேடை அல்ல என ஜாவோ கூறியுள்ளார். ஆனால் ஜோ பிடனின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவில் உள்ள உரிமை குழுக்கள் மற்றும் அரசியவாதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஏனென்றால் ஆப்கானிஸ்தான் பிரச்சனையால் பிடனின் மதிப்பு குறைந்துள்ளது. அதனால் சீனாவை எதிர்த்து பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

மேலும் ஜோ பிடன் டொனால்ட் ட்ரம்ப் போல் இல்லாமல் சீனாவுடன் மென்மையான போக்கை கடைபிடிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சீனாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலையால் அடுத்க ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு இராஜதந்திர அல்லது உத்தியேகபூர்வ பிரதிநிதிகளை அமெரிக்கா அனுப்பாது என வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் ஜென் சாகி கூறினார்.

அமெரிக்கா சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவில்லை என்றாலும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு நாங்கள் வீட்டில் இருந்து ஆதரவு, உற்சாகம் அளிப்போம் என ஜென் கூறியுள்ளார். அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் கனடாவும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பதாக கூறியுள்ளனர்.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு தூதரக பிரதிநிதிகளை அனுப்பாமல் இருப்பதற்கு சீனாவின் மனித உரிமை மீறல்களே காரணம் என கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கூறியுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் இருந்த போது கொரோனா வைரஸ் பரவல், உய்கூர் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல், பெண்களுக்கு வலுகட்டாயமாக கருத்தடை, கட்டாய உழைப்பு, தைவான், ஹாங்காய் மற்றும் வர்த்தகம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமடைந்தது.

Also Read: சீனா மற்றும் லாவோஸ் இடையே ரயில் சேவை.. சீன கடன் பொறியில் சிக்கியதா லாவோஸ்?

தற்போது ஜோ பிடனும் அதையே கடைபிடிப்பதால் அமெரிக்கா மற்றும் சீனா இடையே மேலும் மோதல் அதிகரித்துள்ளது. கடைசியாக அமெரிக்கா 1980 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சோவியக் யூனியனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை அமெரிக்க புறக்கணித்தது. தற்போது சீன குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.

Also Read: பாகிஸ்தானிடம் கடனை திருப்பி கேட்கும் சீனா.. திவாலாகும் நிலையில் உள்ள பாகிஸ்தான்..

ஏற்கனவே சீனாவில் கொரோனா தொற்று நோய் பரவல், தென்சீனக்கடல் பிரச்சனை, முன்னாள் டென்னிஸ் வீரங்கனையான பெங் ஷூவாய், ஓய்வுபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகருக்கு எதிராக பாலியல் குற்றச்சட்டை முன்வைத்ததை அடுத்து சர்வதேச அளவில் சீனாவின் ஆதரவு நிலைப்பாடு குறைந்து வருகிறது. மேலும் அமெரிக்காவின் இந்த அறிவிப்பை சீன மக்கள் வரவேற்பதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால் அவர்கள் குறைவாக வந்தால் குறைவான வைரசையே கொண்டு வருவார்கள் என சீனர்கள் கூறுகிறார்கள்.

Also Read: பாகிஸ்தானில் இலங்கை நபரை கொன்று உடலை எரித்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு..

Leave a Reply

Your email address will not be published.