சீனா போரை தொடங்க தயங்காது.. நேருக்குநேர் சந்திப்பில் அமெரிக்க அமைச்சரை எச்சரித்த சீன அமைச்சர்..

தைவான் சுதந்திரத்தை அறிவித்தால் பெய்ஜிங், ஒரு போரை தொடங்க தயங்காது என சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங்கே, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆட்டினை வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார்.

சிங்கப்பூரில் ஜூன் 10 முதல் 12 வரை ஷாங்கிரி-லா உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினுடன் தனது முதல் நேருக்கு நேர் சந்திப்பை வெய் பெங்கே நடத்தியபோது இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சீனா தைவானை அதன் பிரதேசமாக கருதுகிறது மற்றும் தேவைப்பட்டால் பலவந்தமாக தைவானை கைப்பற்றுவோம் என ஏற்கனவே கூறியிருந்தது. இந்த நிலையில் சிங்கப்பூர் சந்திப்பின் போது தைவானை சீனாவில் இருந்து யாராவது பிரிக்க துணிந்தால். சீன இராணுவம் எந்த விலை கொடுத்தாலும் போரை தொடங்க தயங்காது என லாயிட் ஆஸ்டினை வெய் பெங்கே எச்சரித்துள்ளார்.

சீன பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, சீனா தைவான் சுதந்திரம் சதித்திட்டத்தை முறியடித்து தாய்நாட்டின் ஒருங்கிணைப்பை உறுதியுடன் நிலைநிறுத்தும். மேலும் தைவான் சீனாவின் தைவான், சீனாவை கட்டுப்படுத்த தைவானை பயன்படுத்துவது ஒருபோதும் வெற்றிபெறாது என அமைச்சக குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, ஆஸ்டின் தைவான ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தற்போதைய நிலையில் ஒருதலைப்பட்சமான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தைவான் மீதான நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அழைப்பு விடுத்தார் என அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டபோது. ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், தைவானை சீனா தாக்கினால் அமெரிக்கா இராணுவ ரீதியாக பாதுகாக்கும் என கூறினார். பின்னர் வெள்ளை மாளிகை அதிபரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தது. இராணுவ ரீதியாக அமெரிக்கா தலையிடுமா இல்லையா என வெள்ளை மாளிகை தெளிவாக கூறவில்லை.

Also Read: முகமது நபி சர்ச்சை: நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்த நெதர்லாந்து பாராளுமன்ற தலைவர்..

இந்த உச்சிமாநாட்டில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷ்டா, ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இன்று உக்ரைன் நாளை கிழக்கு ஆசியாவாக இருக்கலாம். விதிகளை மதிக்காமல் அச்சுருத்தல் மூலம் மற்ற நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பை மிதிக்கும் ஒரு அமைப்பின் தோற்றத்திற்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் என ஜப்பான் பிரதமர் தெரிவித்தார்.

Also Read: கட்டிடங்கள் மீது விழுந்து விபத்தில் சிக்கிய சீன போர் விமானம்.. பதற்றத்தில் மக்கள்..

சீனா தைவான் மட்டும் அல்லாமல் தென் சீன கடல் பகுதி அனைத்தையும் உரிமை கோருகிறது. மேலும் தென்சீனக்கடலை புரூனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளும் உரிமை கோருகின்றன. உச்சி மாநாட்டில் இன்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் உரையாற்ற உள்ள நிலையில், நாளை சீன பாதுகாப்பு அமைச்சர் உரையாற்றுகிறார்.

Also Read: சர்ச்சைக்கு மத்தியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் வெளியுறவு அமைச்சர்..

Leave a Reply

Your email address will not be published.