வீழ்ச்சியை சந்திக்கும் சீனாவின் கனவு திட்டமான பெல்ட் அண்ட் ரோட் திட்டம்..?

கொரோனா தொற்று காரணமாக சீனாவின் மிகப்பெரிய கனவு திட்டமான பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தினை மறுபரீசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் சீனா உள்ளது.

இந்த திட்டத்திற்கு கடன் வழங்கி வந்த சீன வங்கிகளுக்கு சரியான நேரத்தில் கடன் திரும்பி வராததால் வங்கிகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. மேலும் இந்த திட்டத்திற்கு செலவு செய்வதை சீனா குறைத்து வருவதாக கூறப்படுகிறது.

ஆப்ரிக்காவில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தினால் சீனாவின் செலவு அதிகரித்துள்ளது. சீனா சாலை, இரயில்வே மற்றும் தொலைதொடர்பு ஆகியவற்றிற்கு 1 ட்ரில்லியன் டாலர் செலவு செய்ய திட்டமிட்டிருந்தது.

ஆப்ரிக்கா முழுவதும் உள்கட்டமைப்பை உருவாக்க சீனாவின் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்களும் கடன் வழங்க முன்வந்துள்ளன. கொரோனா தொற்று காரணமாக சீனாவின் மிகப்பெரிய வங்கிகளான சீனா மேம்பாட்டு வங்கி மற்றும் சீனா ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆகியவை BRI திட்டங்களுக்கு செலவிடும் தொகையை உள்நாட்டு திட்டங்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயதில் உள்ளன.

கடந்த வருடம் ஜாம்பியா சீனாவிற்கு வழங்க வேண்டிய கடனை ஒத்திவைக்க கோரியது. அதன்படி திருப்பி கொடுக்க வேண்டிய கடனை ஒத்திவைத்தது சீனா. இதேபோல் பல ஆப்ரிக்க நாடுகளும் கடனை திருப்பி செலுத்த போராடி வருகின்றன.

சீனாவிற்கு சொந்தமான ஆப்ரிக்கா ஸ்டார் ரயில்வே ஆப்ரேஷன் நிறுவனத்தின் உடனான ஒப்பந்தத்தை நிறுத்த போவதாக கென்யா கூறியுள்ளது. இது சீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் மொசாம்பிக், உகாண்டா போன்ற நாடுகளில் புதுபுது நிறுவனங்களை தொடங்கி சீனா கடன்களை வழங்கி வருகிறது.

இந்த கடன் சுமையை சுங்கச்சாவடி மூலம் வரும் வருமானத்தை சீன நிறுவனங்களுக்கு ஆப்ரிக்க நாடுகள் அளித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *