பின்னடைவில் சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டம்.. சீனா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து வரும் ஆப்ரிக்க நாடுகள்..

ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள நாடுகள் சீனா உடனான திட்டங்களை ரத்து செய்து வருகின்றன. சீனா தங்களை கடன் வலையில் சிக்க வைக்க முயற்சிப்பதாக சில நாட்டு அதிபர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஒப்பந்தம் சட்டத்திற்கு விரோதமாக இருப்பதாகவும் குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஆப்ரிக்க நாடான கென்யாவில் ஸ்டாண்டர்ட் கேஜ் ரயில்வே கட்டுமானத்திற்காக கென்யா மற்றும் சீனா இடையே 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் சட்ட விரோதமானது, ஒப்பந்தத்தின் போது சட்ட நடைமுறையை பின்பற்றவில்லை என கூறி கடந்த ஆண்டு ஜூலை மாதம் கென்யாவின் உச்சநீதிமன்றம் இந்த திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டது.

மேலும் ஒரு ஆப்ரிக்க நாடான காங்கோவும் சீனா உடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 2001 முதல் 2019 வரை ஆட்சியில் இருந்த காங்கோ ஜனாதிபதி ஜோசப் கபிலா, சாலைகள், மருத்துவமனைகள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்பை மேற்கொள்ள சீனாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் தற்போதைய காங்கோ அதிபர் பெலிக்ஸ் சிசேகேடி, ஒப்பந்தங்களை போட்ட காங்கோ மக்கள் ஏழைகளாக உள்ளனர். ஆனால் சீன நிறுவனங்களோ பணக்காரர்களாக உள்ளனர்.

இந்த ஒப்பந்தம் சட்ட விரோதமாக போடப்பட்டுள்ளது. நாங்கள் முறையான ஒப்பந்தங்களை எதிர்பார்க்கிறோம் என அதிபர் கூறினார். காங்கோவில் போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஈடாக அங்கு உள்ள சுரங்கத்தை சீனா கைப்பற்றி உள்ளது. சுரங்கத்தில் கிடைக்கும் தாமிரம் மற்றும் கோபால்ட் ஆகியவற்றை தனது நாட்டிற்கு சீனா ஏற்றுமதி செய்கிறது. இந்த நிலையில் தான் காங்கோ அதிபர் சீனா உடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவும் சீனா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து உள்ளது. தலைநகர் அக்ராவில் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க சீன நிறுவனமான எவரிடே ட்ராபிக் மற்றும் லைட்னிங் டெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால் அந்நிறுவனம் மேற்கொண்டுள்ள வேலையில் திருப்தி இல்லை என கூறி கானா அரசு திட்டத்தை ரத்து செய்துள்ளது.

Also Read: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆதரவு..

இதேபோல் தான்சானியாவும் சீனா உடனான 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள திட்டத்தை ரத்து செய்ய உள்ளதாக கூறியுள்ளது. முன்னாள் ஜனாதிபதியால் போடபட்ட ஒப்பந்தத்தை இப்போதைய தான்சானிய ஜனாதிபதி ஜான் மகுஃபுலி ரத்து செய்வதாக கூறியுள்ளார். அதிக வட்டி, குறுகிய கால முதிர்வு போன்றவை குற்றசாட்டுகளாக முன்வைக்கிறார்.

பல ஆப்ரிக்க நாடுகள் சீனாவில் இருந்து கடன் வாங்க தங்கள் நாட்டு இயற்கை வளங்களை அடமானம் வைத்துள்ளன. காங்கோ, கென்யா, சூடான், தெற்கு சூடான், கினியா, கானா போன்ற நாடுகள் தனது வருமானத்தை சீனாவிற்கு வட்டியாக மட்டுமே கட்டி வருகின்றனர். தற்போது இந்த ஆப்ரிக்க நாடுகள் சீனா உடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து வருகின்றனர்.

Also Read: பாகிஸ்தான் இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியின் போது 28 லட்சத்திற்கு பிரியாணி சாப்பிட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர்கள்..

இது சீனாவில் ஒன் பெல்ட் ஒன் ரோட் திட்டத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சீனாவின் கடன் பொறியில் சிக்காமல் தற்போது ஆப்ரிக்க நாடுகள் ஒப்பந்தத்தை ரத்து செய்து வருகின்றனர். மேலும் சீனாவிடம் வெளிப்படை தன்மை இல்லாதது மற்றும் மோசமான கட்டமைப்பு ஆகியவற்றாலும் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளுமே சீனா உடனான ஒப்பந்தத்தில் எச்சரிக்கையுடன் உள்ளன.

Also Read: காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய துருக்கி அதிபர் எர்டோகன்.. பதிலடி கொடுத்த ஜெய்சங்கர்..

Leave a Reply

Your email address will not be published.