ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு அமைச்சர்..!
சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன்று பாகிஸ்தான் பயணத்தை முடித்து கொண்டு திடீர் என ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு பயணம் மேற்கொண்டதாக ஆப்கானிஸ்தானின் வெயியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஆகஸ்டு மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து எந்த நாடும் தாலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் பாகிஸ்தான், சீனா மற்றும் கத்தார் உட்பட சில நாடுகள் தங்களது அமைச்சர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன்று பாகிஸ்தான் பயணத்தை முடித்து கொண்டு ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளரின் அறிக்கையின்படி, சுரங்க துறையில் பணிகளை தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம், அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து விவாதிக்க ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகியை சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
Also Read: பெரும்பான்மையை இழந்த இம்ரான்கான்..? பிரதமர் பதவியை ராஜினாமா செய்யகோரி நெருக்கடி..
இருப்பினும் சீனா இன்னும் தாலிபான் அரசை அங்கீகரிக்கவில்லை. மனித உரிமைகள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அனைவரும் உள்ளடக்கிய ஆட்சி ஆகியவற்றில் தங்கள் நிலைபாட்டை நிருபிக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த வார தொடக்கத்தில் பள்ளிகள் அனைத்து மாணவர்களுக்கும் திறக்கப்படும் என தாலிபான் அறிவித்த நிலையில் நேற்று உயர்நிலை பள்ளியிலிருந்து பெண்களை வீட்டிற்கு அழைத்து செல்ல உத்தரவிட்டுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: நிதி நெருக்கடி காரணமாக மூன்று வெளிநாட்டு தூதரகங்களை மூட உள்ள இலங்கை..?
ஆப்கானிஸ்தானில் கனிம வளங்கள் அதிகமாக உள்ள நிலையில் அவற்றை தாலிபான் ஆட்சியில் மிக குறைந்த விலையில் கைப்பற்ற சீனா திட்டமிடுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. சீனாவை தவிர ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்யாவின் சிறப்பு தூதர் ஜமீர் கபுலோவ், காபூலுக்கு சென்று அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து விவாதிக்க ஆப்கானிஸ்தானின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முட்டாகியை சந்தித்தார்.