மீண்டும் ஒரு பனிப்போர் ஏற்படும்.. சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை..

APEC எனப்படும் ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தினால் மீண்டும் ஒரு பனிப்போர் உருவாகும் என எச்சரித்தார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை தயாரித்து கொடுப்பதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையே கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இந்த வருடம் நியூசிலாந்து தலைமையில் நடைபெறும் காணொளி வாயிலான APEC மாநாட்டில் பங்கேற்ற ஜி ஜின்பிங் மீண்டும் ஒரு பனிப்போர் உருவாகும் என எச்சரித்துள்ளார்.

சீனா தென்சீனக்கடல் முழுவதையும் சொந்தம் கொண்டாடி வருகிறது. தென்சீனக்கடலில் செயற்கையாக தீவுகளை உருவாக்கி அங்கு தனது போர்கப்பல்களை நிறுத்தி உள்ளது. இதற்கு அமெரிக்க உட்பட அனைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

APEC எனப்படும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் பசுபிக் நாடுகளை சேர்ந்த 21 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். உலகின் மொத்த பொருளாதாரத்தில் 60 சதவீதத்தை இந்த APEC நாடுகள் கொண்டுள்ளன.

Also Read: பாலைவனத்தில் போர்கப்பலை மறைத்து வைத்து இரகசியமாக போர்பயிற்சியில் ஈடுபடும் சீனா..

APEC அமைப்பின் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. இதில் பசுபிக் நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, சிலி, ஹாங்காங், இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, பெரு, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

Also Read: S-500 அமைப்பை வாங்க தயார்..? ஆனால் இந்தியாவுக்கு விற்க கூடாது.. ரஷ்யாவுக்கு நிபந்தனை விதித்த சீனா..

One thought on “மீண்டும் ஒரு பனிப்போர் ஏற்படும்.. சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை..

Leave a Reply

Your email address will not be published.