ஏவுகணை தாயாரிக்க பயன்படும் பொருட்களுடன் பாகிஸ்தான் நோக்கி சென்ற சீன கப்பல்.. மடக்கி பிடித்த இந்திய கடலோர காவல்படை..

கடந்த ஆண்டு சட்ட விரோதமாக ஏவுகணை தயாரிக்க பயன்படும் பொருட்களுடன் சிக்கிய சீன கப்பல் தொடர்பான வழக்கை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் விசாரித்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய கடலோர காவல்படை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகம் படும்படி ஒரு சீன கப்பல் கராச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அதனை இந்திய கடலோர காவல்ப்படை விசாரித்ததில் முன்னுக்குபின் முரணான கருத்துக்களை கூறியதால் கப்பலில் நுழைந்து சோதனையிட்டனர்.

சோதனையில் ஏவுகணை தயாரிக்க பயன்படும் பொருட்கள் மற்றும் ஏவுகணையை செலுத்த பயன்படுத்தப்படும் பிரஷர் சேம்பர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கப்பலை கைப்பற்றி குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில் “டா குய் யுன்” என்ற அந்த கப்பல் சீனாவிற்கு சொந்தமானது என உறுதியானது.

NIA வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து சீன அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனங்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்க சீன அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்தி தொடர்பாளர் கூறினார்.

Also Read : இந்தியா நேபாளம் இராணுவம் இடையே போர் பயிற்சி.. இந்தியா வந்த நேபாள் வீரர்கள்..

ஏவுகணை தொடர்பான வழக்கு என்பதால் DRDO அதிகாரிகளும் இதனை பார்வையிட்டு இவை ஏவுகணை தயாரிப்பதற்கான பொருட்கள் தான் என உறுதி செய்தனர். இந்த வழக்கில் ஆதாரத்திற்காக DRDO சேர்க்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இதன் தீவிரத்தை உணர்ந்து கடந்த வாரம் இந்த வழக்கு வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.

Also Read: பாகிஸ்தானின் போர் விமானத்தை வாங்க உள்ள அர்ஜென்டினா..? எந்த விமானம் தெரியுமா..?

Leave a Reply

Your email address will not be published.