கட்டிடங்கள் மீது விழுந்து விபத்தில் சிக்கிய சீன போர் விமானம்.. பதற்றத்தில் மக்கள்..

மத்திய சீனாவின் ஹுபே மாகாணத்தில் நேற்று சீன போர் விமானம் கட்டிடங்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் J-7 போர் விமானம் ஹுபேயின் சியாங்யாங் நகரின் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது விமான விபத்து இதுவாகும். மோதிய வேகத்தில் விமானம் வெடித்து சிதறியதில் தீ விபத்து ஏற்பட்டு அடுத்தடுத்த வீடுகளுக்கு தீ பரவியது.

இந்த விபத்தில் விமானி பாதுகாப்பாக பாராசூட் மூலம் வெளியேறிய நிலையில் பொதுமக்கள் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் தீ பரவிய நிலையில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீன விமானப்படைக்கு புதிய போர் விமானிகளுக்கு போர் பயிற்சி அளிக்க சியாங்யாங்கில் உள்ள லாஹெகோவ் விமான நிலையத்தில் J-7 போர் விமானத்தில் பயிற்சியின் போது தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டு இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துக்கான காரணம் மற்றும் மேலும் உயிரிழப்புகள் உள்ளதாக என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது.

Also Read: பிரம்மோஸ், ஆகாஷ் வான் பாதுகாப்பு மற்றும் ரேடார்களை வாங்க உள்ள வியட்நாம்..?

சீனாவின் பயிற்சி போர் விமானங்கள் ஏற்கனவே பலமுறை விபத்தில் சிக்கியுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு சீன விமானப்படை போர் விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானி பாதுகாப்பாக வெளியேறிவிட்டார். அதேபோல் மற்றொரு விபத்தில் கிழக்கு சீன மாகாணமாக ஜெஜியாங்கில் இரவு பயிற்சியின் போது போர்விமானம் விபத்தில் சிக்கியதில் விமானி உயிரிழந்தார்.

Also Read: பலுசிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது பயங்கர தாக்குதல்.. 8 பாக். வீரர்கள் உயிரிழப்பு..

மேலும் சீனாவின் போர் விமானம் மற்றும் சீன-பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பு போர் விமானமும் சமீபத்தில் பாகிஸ்தானில் பலமுறை விபத்தில் சிக்கியுள்ளன. அதில் விமானி உட்பட பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். சீனாவின் விமானப்படையில் புதிய தலைமுறை போர் விமானங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், எண்ணிக்கைக்காக பழைய விமானங்களையும் சீனா பயன்படுத்தி வருவதே இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணம் என பரவலாக கூறப்படுகிறது.

Also Read: டேங்க் கொலையாளியான TB2 ட்ரோனை தனது விமானத்தளத்தில் நிறுத்தியுள்ள பாகிஸ்தான்..

Leave a Reply

Your email address will not be published.