சீனாவிற்கு எதிராக $490 பில்லியன் மதிப்பில் ஜப்பானில் சிப் உற்பத்தி தொழிற்சாலை.. இந்தியாவில் அமைக்கவும் பேச்சுவார்த்தை..

சீனாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் ஜப்பான் தைவான் நிறுவனத்தின் உதவியுடன் சிப் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதற்கு மானிய தொகையும் வழங்க உள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

செமிகண்டக்டர்கள் இன்று மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டதால் அதனை உள்நாட்டிலேயே தயாரிக்க உலக நாடுகள் முன்வந்துள்ளன. கார் பேட்டரிகள், கம்யூட்டர்கள், ஸ்மாட்போன், விட்டு எலக்ட்ரிக் பொருட்கள் உட்பட அனைத்து மின்சார சாதனங்களுக்கு செமிகண்டக்டர் இன்றியமையாதது ஆகும்.

2018 ஆம் ஆண்டு நிலவரப்படி குறைக்கடத்தி தொழிற்துறையின் மதிப்பு 481 பில்லியன் அமெரிக்க டாலர். ஆனால் இன்று இதன் மதிப்பு மேலும் உயர்ந்திருக்கும் என கூறப்படுகிறது. சிப் உற்பத்தியில் உலக அளவில் தென்கொரியா, தைவான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

தற்போது அடுத்த சிப் உற்பத்தியாளராக மாறுவதற்கு ஜப்பான் தயாராகி வருகிறது. உலகெங்கிலும் உள்ள சிப் உற்பத்தியாளர்களை ஜப்பானில் தொழிற்சாலை அமைக்க ஜப்பான் அரசு முயன்று வருகிறது. முக்கியமாக அமெரிக்க சிப் உற்பத்தியாளர்களுக்கு ஜப்பான் குறிவைப்பதாக கூறப்படுகிறது.

வெள்ளி அன்று ஜப்பான் பிரதமர் சிப் உற்பத்திக்காக 490 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்தார். இதன் அடிப்படையில் தைவான் சிப் உற்பத்தி நிறுவனம் TSMC மற்றும் சோனி குருப் கார்ப்பரேசன் நிறுவனத்தின் மூலம் மேற்கு ஜப்பானில் 7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிப் உற்பத்தி தொழிற்சாலையை டோக்கியோவிற்கு மாற்றும் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் செலவில் பாதி அல்லது அதற்கு மேல் உள்ள செலவை கொடுக்க தயாராக இருப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. தற்போது ஜப்பானில் சிப் தொழிற்சாலையை அமைக்கும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பாக எந்த சட்டமும் இல்லை. இதனால் வரும் நாடாளுமன்றத்தில் மானியம் வழங்குவது தொடர்பான மசோதாவை ஜப்பான் தாக்கல் செய்ய உள்ளது.

இதேபோல் சீனாவுக்கு சிப் முக்கியமான ஒன்று. சீனாவும் சிப் தொழிற்சாலையை அமைக்க முயன்று வருகிறது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் சீன எலக்ட்ரானிக்ஸ் துறையை முடக்கியது. சீனாவிற்கு தனது மாதிரிகளை ஏற்றுமதி செய்யவும் தடை விதித்தார். சீன நிறுவனங்களும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டன. சீனாவிற்கு குறைகடத்திகளை விற்பனை செய்வதையும் அமெரிக்க நிறுத்திவிட்டது.

Also Read: உலக நாடுகளை ஒன்றிணைக்கும் பிரதமர் மோடியின் “ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே கட்டம்” என்ற மெகா திட்டம்..

இதனால் சீனா தனது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு குறைகடத்திகளை இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் உள்நாட்டிலேயே சிப் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் சீன பொருளாதாரம் மோசமடைந்து வருவதாலும், அமெரிக்கா சீனா இடையே மோதல் இருப்பதாலும் சீனாவில் தொழிற்சாலை அமைக்க யாரும் முன்வரவில்லை.

Also Read: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் 1.25 லட்சம் கோடிக்கு தீபாவளி விற்பனை.. சீனாவுக்கு 50,000 கோடிக்கு நஷ்டம்..?

இதேபோல் 5G சாதனங்கள் முதல் மின்சார வாகனங்கள் வரை அனைத்திற்கும் வழங்குவதற்காக இந்தியாவும் தைவானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 7.5 பில்லியன் டாலர் மதிப்பிலான சிப் உற்பத்தி ஆலையை இந்தியாவில் தொடங்க மோடி தலைமையிலான அரசு கடந்த சில மாதங்களாகவே தைவானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. குவாட் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் சீனாவிற்கு எதிராக அதன் ஆதிக்கத்தை முறியடிப்பது, குறைகடத்தி விநியோக சங்கிலியை மறுசீரமைப்பது உள்ளிட்ட திட்டங்களை வகுத்துள்ளன.

Also Read: ரூபேவின் அசுர வளர்ச்சி.. மாஸ்டர் கார்டை தொடர்ந்து விசாவும் அமெரிக்க அரசாங்கத்திடம் ரூபே மீது புகார்..

Leave a Reply

Your email address will not be published.