சீனாவில் இருந்து வெளியேறும் சிப் நிறுவனம்.. இந்தியாவிற்கு மாற்ற முடிவு..

மெமரி சிப் தயாரிப்பாளரான மைக்ரான் டெக்னாலஜி இந்த ஆண்டு இறுதிக்குள் ஷாங்காயில் DRAM சிப் வடிவமைப்பை நிறுத்த உள்ளதாக அந்த நிறுவனம் புதன்கிழமை கூறியுள்ளது. ஏற்கனவே சீனாவை விட்டு பல நிறுவனங்கள் வெளியேறி வரும் நிலையில் மைக்ரான் நிறுவனமும் வெளியேறுவது சீனாவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மைக்ரான் நிறுவனம் தனது DRAM இன்ஜினியரிங் குழுவை இந்த ஆண்டு இறுதிக்குள் மூட உள்ளதாக தெரிவித்துள்ளது. NAND மற்றும் SSD தொழிற்நுட்பத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் RAMs மந்நும் SSDs போன்ற அனைத்து வகையான மெம்ரி சிப்களை தயாரிக்கும் அமெரிக்காவை தளமாக கொண்ட நிறுவனம் ஆகும்.

DRAM சிப் வடிவமைப்பு தளத்தில் பணிபுரியும் 150 சீன பொறியாளர்களை அமெரிக்கா அல்லது இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மைக்ரான் டெக்னாலஜி வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக, விநியோக சங்கிலியில் பாதிப்பு, குறைகடத்தி பற்றாக்குறை, தொழிற்நுட்ப கசிவு, சீனாவில் குறைந்து வரும் வெளிப்படை தன்மை மற்றும் நம்பகத்தன்மையற்ற IPR கொள்கைகள் ஆகியவை ஆகும்.

மேலும் தென்சீனக்கடல் பிரச்சனை, மேற்கத்திய நாடுகளுடன் பிரச்சனை, உய்கூர் முஸ்லிம்களின் இனப்படுகொலை, ஹாங்காங் பிரச்சனை மற்றும் தைவானுடன் பிரச்சனை போன்றவை மைக்ரோன் டெக்னாலஜி வெளியேற முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஏற்கனவே TSMC. சாம்சங் போன்ற நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறியுள்ளன.

சீனாவின் செமிகண்டக்டர் துறையில் தொழிலதிபரான சென் ராங் கூறுகையில், மைக்ரானின் இந்த நடவடிக்கை ஆச்சரியமளிக்கவில்லை. சீனாவில் பணிபுரியும் நிறுவனங்கள் சில காலமாக பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. IPR மீறல்கள், காப்புரிமை திருட்டுகள், திறமையான ஊழியர்களை மற்ற உள்ளுர் நிறுவனங்கள் இழுத்துகொள்ளுதல் ஆகியவற்றை கூறியுள்ளார்.

மேலும் தொழிற்நுட்பம் மற்றும் முக்கியமான தரவு கசிவு, சீன அதிகாரிகளின் அடக்கு முறை ஆகியவை வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேற காரணம் என சென் ராங் கூறியுள்ளார். சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களால் சீனாவிற்கு தான் நஷ்டம். இது இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் ஆதாயம் என தெரிவித்துள்ளார்.

ஏனெனில் ஜப்பானும் இந்தியாவும் சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தங்களது நாட்டிற்கு கொண்டு வருவதற்கு ஊக்கத்தொகையை அறிவித்துள்ளன. ஜப்பான் 490 பில்லியன் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. அதேபோல் இந்தியாவும் 76,000 கோடி PLI ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது.

இந்த திட்டம் உலகளாவிய சிப் உற்பத்தியாளர்களிடம் இருந்து முதலீடுகளை ஈர்க்கவும், அவர்களின் யூனிட்களை இந்தியாவிற்கு மாற்றவும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் உள்ளுர் சிப் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்தும் முதலீடுகளை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.