சீனாவில் இருந்து கண்டெய்னர்களை இறக்குமதி செய்ய தடை.. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடிவு..

சீனா செயற்கையாக கண்டெய்னர் தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளதால், இந்தியா உள்நாட்டிலேயே கண்டெய்னர் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான கான்கோர் நிறுவனத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 8,000க்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் தேவைப்படுகிறது. இதனால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கண்டெய்னர் உற்பத்திக்காக விரைவில் டெண்டர் விடப்படும் என கூறப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்திய சந்தையில் 8,000 கண்டெய்னர்களுக்கு மேல் தேவைப்படுவதால், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கவும், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என கல்யாண ராமா கூறினார்.

ஏற்கனவே BHEL, பிரைத்வெயிட் ஆகியவை கண்டெய்னர்களை உருவாக்கி சோதனை செய்து வருகின்றன. இந்தியாவிலேயே கண்டெய்னர் உற்பத்திக்கான தொழிற்நுட்பம் மற்றும் பொருட்கள் கிடைக்கும் நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சார்ந்திருக்கும் நிலையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

SAIL, டாடா ஸ்டீல் மற்றும் ஜிண்டா ஸ்டீல் ஆகிய நிறுவனத்திடம் இருந்து ஸ்டீல் கிடைக்கும் நிலையில், கல்யாணி காஸ்ட் டெக், பால்மர் லாரி மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் கண்டெய்னர்களை தயாரிக்க தயாராக உள்ளனர்.

இந்தியாவிலேயே கண்டெய்னர்களை தயாரிப்பதன் மூலம் அந்நிய செலாவணி மிச்சமாவது மட்டுமில்லாமல் வேலை வாய்ப்பும் உருவாகிறது. உலக தரத்தில் கண்டெய்னர்களை உருவாக்க பல இந்திய நிறுவனங்கள் செயலபட்டு வருகின்றன.

உலகின் தேவையை பூர்த்தி செய்து, இந்தியாவை உலகின் கண்டெய்னர் மையமாக மாற்ற உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். அமெரிக்கா உடனான மோதலால் சீனா சில நாட்களுக்கு முன்பு காலி கண்டெய்னர்களை வாங்கி குவித்ததால் பல பொருட்களின் விலை கூட தொடங்கியது. இதனால் உள்நாட்டிலேயே கண்டெய்னர்களை உற்பத்தி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *