காங்கிரஸ் கட்சியின் ரேபரேலி தொகுதி MLA அதிதி சிங் மற்றும் சிக்ரி MLA பந்தனா சிங் பாஜகவில் இணைந்தனர்..

உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங் புதன் கிழமை அன்று பாஜகவில் இணைந்தார். அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பந்தனா சிங் ஆகியோர் உத்திர பிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்த்ரா தேவ் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

உத்திர பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்ராகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதற்கான தேர்தல் வேலைகளை கட்சிகள் இப்போதே தொடங்கி விட்டன.

சமீபத்தில் ABP மற்றும் சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் உத்திரபிரதேசம், கோவா, உத்ராகாண்ட் மற்றும் மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் சிங்கின் மகன் அதிதி சிங் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் ரேபரேலி தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 34 வயதாகும் இவர் இளம் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர். கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அவ்வபோது பாஜகவை ஆதரித்தும் பேசி வருகிறார். இதனால் அவர் விரைவில் பாஜகவில் இணையக்கூடும் என வதந்திகள் பரவ தொடங்கியது. அதனை உறுதிபடுத்தும் விதமாக புதன்கிழமை அன்று உத்திர பிரதேச மாநில பாஜக தலைவர் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

Also Read: இந்தியா பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு உணவு பொருட்களை கொண்டு செல்ல பாகிஸ்தான் அனுமதி..?

இவரது வருகையால் தனது கோட்டையாக நினைத்த ரேபரேலி தொகுதியை எளிதாக வென்றுவிடலாம் என பாஜக கூறுகிறது. அதிதி சிங் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் பாஜகவுடன் தொடர்பு கொண்டதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Also Read: பூர்வாஞ்சல் ஆறுவழிச்சாலையை நாட்டு அர்பணித்தார் பிரதமர் மோடி.. போர் விமானங்கள் தரை இறங்கி சாகசம்.

இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் சிக்ரி தொகுதி MLA பந்தனா சிங் பாஜகவில் உத்திரபிரதேச பாஜக தலைவர் முன்னிலையில் இணைந்தார். 2017 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சிக்ரி தொகுதியில் போட்டியிட்டு 5,475 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த ஆண்டு ஜூன் மாதம் பந்தனா சிங் உட்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் பந்தனா சிங் பாஜகவில் இணைந்துள்ளார்.

Also Read: இந்தியாவின் அதிநவீன ராணி கம்லாபதி இரயில் நிலையத்தை நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர் மோடி..

Leave a Reply

Your email address will not be published.