ISIS அமைப்புடன் தொடர்பு.. காங்கிரஸ் கட்சி MLAவின் மருமகளை அதிரடியாக கைது செய்த NIA..

கர்நாடகாவை சேர்ந்த மறைந்த உல்லால் தொகுதி முன்னாள் MLA BM இடினாப்பாவின் மகன் BM பாஷாவின் வீட்டில் NIA அதிகாரிகள் ஜனவரி 3 ஆம் தேதி சோதனை நடத்தினர். அப்போது ISIS அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் பாஷாவின் மருமகள் மரியத்தை NIA அதிகாரிகள் கைது செய்தனர்.

குடகு மாவட்டத்தை சேர்ந்த தீப்தி மார்லா என்ற மரியம் BDS படித்து கொண்டிருந்த போது பாஷாவின் மகன் அனஸ் அப்துல் ரஹிமானை காதலித்து வந்துள்ளார். பின்னர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி அனஸை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தீப்தி மார்லா என்ற தனது பெயரை மரியம் என மாற்றிக்கொண்டார்.

இடினாப்பா காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார். கர்நாடக சட்டமன்ற தொகுதிக்கு உல்லல் தொகுதியில் இருந்து மூன்று முறை MLA ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இடினாப்பா 2009 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் NIA மற்றும் மாநில போலிஸ் அதிகாரிகள் காஷ்மீரில் மூன்று இடங்களிலும், பெங்களூர் மற்றும் மங்களூருவில் தலா ஒரு இடம் என மொத்தம் ஐந்து இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையிட்டு நான்கு பேரை கைது செய்தனர்.

இந்த நான்கு பேரும் ISIS அமைப்புடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் காஷ்மீரை சேர்ந்த ஒபைத் ஹமீத் மற்றும் முஸம்மில் ஹசன் பட், மங்களூரை சேர்ந்த அனஸ் அப்துலின் சகோதரர் அம்மார் அப்துல் ரஹ்மான் மற்றும் பெங்களூரை சேர்ந்த அலி முவியா என அடையாளம் காணப்பட்டது.

அவர்கள் ISIS அமைப்பில் சேர மக்களை ஊக்குவித்தல், நிதி திரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக NIA குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ISIS அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக கேரளாவை சேர்ந்த அம்மாரின் கூட்டாளி டாக்டர் ரஹீஸ் ரஷீத், முஸ்ஹப் அன்வர் மற்றும் முக்கிய குற்றவாளி முகமது அமீனையும் NIA கைது செய்தது.

Also Read: அன்னை தெரேசா சிறுமிகள் காப்பகத்தில் மதமாற்றம்.. வழக்கு பதிவு செய்தது குஜராத் காவல்துறை..

இந்த நிலையில் சிரியா மற்றும் ஈராக்கில் ISIS வீழ்ச்சிக்கு பிறகு அதனை மீண்டும் கட்டமைக்க 2020 ஜனவரி மாதம் மரியம் மற்றும் முகமது அமீன் ஆகிய இருவரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ISIS நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமீன் காஷ்மீர் சென்றுள்ளான். அமீனுடன் சேர்ந்து மரியமும் ISIS சதிதிட்டத்தின் முக்கிய குற்றவாளி என தெரியவந்தது.

2016 ஆம் ஆண்டு IS அமைப்பில் சேர நாட்டை விட்டு வெளியேறிய கேரளாவை சேர்ந்த 13 பேரில் அம்மாரின் மருமகள் அஜ்மலாவும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மரியம் கைது செய்யப்பட்ட இதே வீட்டில் NIA சோதனை செய்த போது அப்துல் ரஹிமானின் சகோதரர் அம்மாரை கைது செய்த போது மரியத்திடமும் விசாரணை நடைபெற்றது.

Also Read: இந்த ஆண்டுக்குள் இந்திய-வங்கதேச எல்லையில் முழுவதுமாக வேலி அமைத்து சீல் வைக்கப்படும் என BSF தகவல்

ஆனால் அவரை NIA கைது செய்யவில்லை. கடந்த ஐந்து மாதங்களாகவே NIA அதிகாரிகள் மரியத்தை கண்காணித்து வந்துள்ளனர். ISIS அமைப்புடன் தொடர்பு இருப்பதற்கான, அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்களை திரட்டியுள்ளனர். அதன் பிறகே தற்போது மரியத்தை கைது செய்துள்ளனர். மேலும் இடினப்பாவின் மகளின் மகள் அல்லது இடினப்பாவின் பேத்தி அஜ்மலா ஒரு ISIS உறுப்பினர் ஆவார்.

Also Read: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 6 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கைது..?

அஜ்மலாவுடன் மரியம் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. NIA 2017 ஆம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையின் படி, அஜ்மலாவும் அவரது கணவர் ஷஃபாஸ் கேபியும் மே 2016 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி சிரியாவுக்கு தப்பி சென்றனர். அப்போது அவருடன் சேர்ந்து கேரளாவில் இருந்து 21 பேர் IS அமைப்பில் சேருவதற்காக நாட்டை விட்டு வெளியேறி ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில் IS அமைப்பில் சேர்ந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி உறுப்பினரின் குடும்பத்தினருக்கு பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: லவ் ஜிகாத்: குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கி கான்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

Leave a Reply

Your email address will not be published.