முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து.. இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பிய கத்தார்..
முகமது நபிக்கு எதிராக ஆளும் பாஜக பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தார் வெளியுறவு அமைச்சகம், இன்று கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டலை வரவழைத்து கண்டன அறிக்கையை கொடுத்துள்ளது.
முகமது நபிக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கு எதிராக கண்டனம் எழுந்த நிலையில் நூபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை கட்சியில் இருந்து பாஜக இடைநீக்கம் செய்தது. இதனை வரவேற்றுள்ள கத்தார், கருத்துக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள இந்திய அரசு, நமது நாகரிக பாரம்பரியம் மற்றம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற வலுவான கலாச்சார மரபுகளுக்கு ஏற்ப இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் மிக உயர்ந்த மரியாதை அளிக்கிறது. இழிவான கருத்துக்களை தெரிவித்தவர்கள் மீது ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் இருதரப்பு உறவுகளின் வலிமையை குறைக்கும் நோக்கத்தில் இத்தகைய கருத்துகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து செய்லபட வேண்டும் என இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரு தொலைகாட்சி சேனலில் நடந்த விவாதத்தின் போது முகமது நபிக்கு எதிராக சர்ச்சைகுரிய கருத்து கூறப்பட்டதாக நூபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் மீது பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த நவீன் குமார், நான் கட்சியின் அர்ப்பணிப்புள்ள தொழிலாளி, கட்சியின் முடிவு எனக்கு மிகவும் முக்கியமானது என கூறியுள்ளார்.
Also Read: இந்தியா சுதந்திரமாக உள்ளது. ஆனால் நாங்கள் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறோம்: இம்ரான்கான்
நூபுர் சர்மா கூறுகையில், எனது வார்த்தைகள் யாருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தால் அல்லது மத உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் எனது அறிக்கையை நிபந்தனையின்றி நான் திரும்ப பெருகிறேன். யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல என நூபுர் சர்மா தெரிவித்துள்ளார்.
Also Read: ரஷ்ய எண்ணெய்க்கு ஐரோப்பா தடை.. இறக்குமதி செய்யும் அமெரிக்கா..?