குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து விசாரணை முடிவு.. அடுத்த வாரம் அறிக்கை தாக்கல்..?

CDS ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 வீரர்கள் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்த விமானப்படையின் விசாரணை கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், அது தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் விமானப்படை தலைமையகத்தில் சமர்பிக்கப்படலாம் என பாதுகாப்பு வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 8 ஆம் தேதி குன்னூர் அருகே முப்படை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் விமானி ஒருவரை தவிர அனைவரும் உயிரிழந்தனர். பலத்த தீக்காயத்துடன் விமானிக்கு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறிது நாட்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி விமானி உயிரிழந்தார்.

இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு மனித தவறு அல்லது ஹெலிகாப்டர் தரையிறங்க தயாராகும் போது பணியாளர்களால் திசைதிருப்பப்பட்டதா என்பது உட்பட விபத்துக்கான அனைத்து சாத்தியமான நிகழ்வுகளையும் ஆய்வு செய்தனர்.

தற்போது விசாரணை நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் விசாரணையில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், விசாரணை குழு அனைத்து வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறையை பின்பற்றியதா என்பதை உறுதிபடுத்த சட்டபூர்வ சோதனை செய்யப்படுவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்களில் கூறப்படுகிறது.

விபத்துக்கான சாத்தியமான காரணங்கள் குறித்து கேட்டபோது, பல விமான நிபுணர்கள் கணிசமான எண்ணிக்கையில் கவனம் திசைதிரும்பியதால் விபத்து நடந்து இருக்கலாம், மோசமான வானிலையால் சில நேரங்களில் விமானிகளின் கவனம் திசைதிருப்பப்படுவதற்கு ஒரு காரணியாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.

Also Read: பாதுகாப்பு துறையில் 351 பொருட்களை இறக்குமதி செய்ய அதிரடி தடை.. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடிவு..

இருப்பினும் உண்மையான காரணம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகே தெரிய வரும். ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் தலைமையிலான விசாரணை குழு சாத்தியமான அனைத்து கோணங்களையும் ஆராய்ந்து அறிக்கையை இறுதி செய்து வருகிறது. அடுத்த வாரம் விமானப்படை தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரியிடம் அறிக்கை சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: DRDO உடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை AMCA போர் விமானத்தை உருவாக்கி வரும் HAL..

இருப்பினும் அதிகாரப்பூர்வ தகலல் எதுவும் இல்லை. விபத்துக்குள்ளான இந்திய விமானப்படையின் MI-17V5 ஹெலிகாப்டரின் விமான தரவு பதிவு (FDR) மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் (CVR) ஆகியவற்றை உள்ளடக்கிய கருப்பு பெட்டி விபத்துக்குள்ளான அன்று மீட்கப்பட்டது. ஏர் மார்ஷல் மானவேந்திர சிங், நாட்டிலேயே சிறந்த விமான விபத்து புலனாய்வாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

Also Read: மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை ரகசியமாக கடலில் இறக்கிய இந்திய கடற்படை..

சிங் தற்போது பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இந்திய விமானப்படையின் பயிற்சி கட்டளைக்கு தலைமை தாங்குகிறார். பயிற்சி கட்டளை பொறுப்பை ஏற்கும் முன் சிங், விமான தலைமையகத்தில் ஆய்வு மற்றும் பாதுகாப்பு இயக்குனர் ஜெனரலாக இருந்தார். தனது பதவியில் விமான பாதுகாப்புக்காக பல்வேறு நெறிமுறைகளை உருவாக்கி உள்ளார். இந்நிலையில் அடுத்த வாரம் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளதாக உறுபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read: 2019 புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட கடைசி பயங்கரவாதியை போட்டுதள்ளிய இந்திய இராணுவம்..?

Leave a Reply

Your email address will not be published.