COP26 பருவநிலை மாற்றம்.. கார்பன் உமிழ்வு ‘நிகர பூஜ்ஜியம்’ என்ற இலக்கு எட்டப்படும் என பிரதமர் உறுதி..
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான COP26 மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டு பேசினார். இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.
COP26 மாநாட்டில் பிரதமர் பேசியதாவது, பருவநிலை உச்சி மாநாட்டிற்காக நான் முதன்முதலில் பாரிஸ் வந்த போது அங்கு மற்ற நாடுகளின் வாக்குறுதிகளுடன் எனது சொந்த வாக்குறுதிகளையும் சேர்க்கும் எண்ணம் இல்லை. சர்வே சுகின்ன பவந்து என்ற கலாச்சாரத்தின் பிரதிநிதியாக மனிதநேயத்தின் மீது அக்கறையுடன் கலந்து கொண்டேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
என்னை பொருத்தவரை பாரிஸ் நிகழ்வு ஒரு உச்சி மாநாடு அல்ல, அது ஒரு உணர்வு, ஒரு அர்பணிப்பு என பிரதமர் கூறினார். மேலும் பாரிஸ் மாநாட்டில் இந்தியா எந்த வாக்குறுதிகளையும் வழங்கவில்லை. அதற்கு பதிலாக 125 கோடி இந்தியர்களும் தங்களுக்கு வாக்குறுதிகளை அளித்தனர். கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் ஈடுபட்டுள்ளனர் இது எனக்கு மகழ்ச்சியை தருவதாக மோடி குறிப்பிட்டார்.
பல பாரம்பரிய சமூகங்கள் இயற்கையோடு இணைந்து வாழும் அறிவை பெற்றுள்ளன. அந்த அறிவை நாம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்ல வேண்டும். அதனை நாம் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இந்தியாவில் ‘நல் ஜே சல்’, தூய்மை இந்தியா மற்றும் உஜ்வாலா போன்ற திட்டங்கள் நமது குடிமக்களுக்கு பலன்களை தருவதோடு மட்டுமில்லாமல் அவர்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தி உள்ளன.
இந்தியா போன்ற பல வளரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றம் பெரும் அச்சுருத்தலாக இருக்கின்றன. உலகை காப்பாற்ற நாம் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். கிளாஸ்கோ மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் நமது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை காப்பாற்றும் என நான் நம்புகிறேன்.
வளர்ந்த நாடுகள் 1 டிரில்லியன் டாலர் காலநிலை நிதியை விரைவில் வழங்க வேண்டும். காலநிலை முன்னேற்றத்தை கண்காணிப்பது போல, காலநிலை நிதியையும் கண்காணிப்பது முக்கியமானது. காலநிலை நிதி குறித்து தங்கள் சொந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நாடுகள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்.
காலநிலை மாற்றத்தில் வாழ்க்கை முறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உலக நாடுகள் இன்று ஒப்புகொள்கின்றன. உங்கள் அனைவருக்கும் ஒரு வார்த்தை இயக்கத்தை முன்மொழிகிறேன். அந்த வார்த்தை LIFE, அதாவது சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை ஆகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்க்கையை ஒரு இயக்கமாக மென்னெடுத்து செல்ல வேண்டும்.
Also Read: தைவானில் அமைய உள்ள தூதரகம்.. ஐரோப்பா, லிதுவேனியாவுக்கு சீனா எச்சரிக்கை..
இந்த இயக்கம் மீன் பிடித்தல், விவசாயம், விருந்தோம்பல், சுற்றுலா, வீட்டு வசதி, பேக்கேஜ்ஜிங், பேஷன், நீர் மேலாண்மை மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என மோடி தெரிவித்தார். காலநிலை தொடர்பாக இதுவரை அளித்த வாக்குறுதிகள் பொய்யானவை என நாம் அறிவோம்.
காலநிலை தொடர்பான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும். உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 17 சதவீதமாக உள்ளது. ஆனால் கார்பன் உமிழ்வில் இந்தியாவின் பங்கு 5 சதவீதம் மட்டுமே என பிரதமர் மோடி தெரிவித்தார்.
Also Read: சீனாவை விட்டு வெளியேறும் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனம்..
காலநிலை மாற்றம் தொடர்பான இந்த மாநாட்டில் நான் 5 வாக்குறுதிகளை அளிக்கிறேன். முதலாவதாக இந்தியா தனது புதைபடிவமற்ற ஆற்றல் திறனை 2030 ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட்டாக கொண்டு வரும். இரண்டாவதாக 2030 ஆம் ஆண்டுக்குள் தனது ஆற்றல் தேவையில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பூர்த்தி செய்யும். மூன்றாவதாக இந்தியா தனது நிகர திட்டமிடப்பட்ட கார்பன் உமிழ்வை 2030 ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியன் டன்னாக குறைக்கும்.
நான்காவதாக 2030 ஆம் ஆண்டுக்குள் தனது பொருளாதாரத்தின் மீதான கார்பன் தீவிரத்தை 45 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கும். ஐந்தாவதாக 2070 ஆம் ஆண்டுக்குள் இந்தியா ‘நிகர பூஜ்ஜியம்’ என்ற இலக்கை அடையும் என பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு வாக்குறுதி அளித்தார்.
Also Read: தனது இரண்டாவது கடல் சோதனை பயணத்தை துவங்கியது IAC விக்ராந்த் விமானந்தாங்கி போர்கப்பல்..