சீன ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது..? பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அலினா சான் தகவல்..

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்து உருவாகி இருக்கலாம் அல்லது கசிந்திருக்கலாம் என ஹார்வர்ட் விஞ்ஞானி டாக்டர் அலினா சான் பிரிட்டிஷ் நாடாளுமன்ற கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.

மரபணு சிகிச்சை மற்றும் செல் பொறியியல் நிபுணரான டார்டர் அலினா சான், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப குழுவின் உறுப்பினர்கள் முன் கூறியபோது, கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் மாற்றியமைக்கப்பட்டதா என ஆராய்வது நியாயமானது என கூறி உள்ளார். வைரஸ் இயற்கையான தோற்றத்தை விட ஆய்வக தோற்றம் அதிகமாக இருப்பதாக சான் கூறியுள்ளார்.

வுஹானின் கடல் உணவு சந்தையில் ஒரு முக்கியமான நிகழ்வு நடந்தது உண்மைதான். அது மனிதர்களால் ஏற்படும் சூப்பர் ஸ்பெரட்டர் நிகழ்வு. அந்த சந்தையில் வைரசின் இயற்கையாக உருவான விலங்கு தோற்றத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு கடல் உணவு சந்தை மூலம் பரவி இருக்கலாம் என சான் தெரிவித்துள்ளார்.

ஆய்வகத்தில் இருந்து கசிவு ஏற்படுவதற்கு முன் வைரஸ் உருவாக்குவதற்கான சாத்திய கூறுகள் பற்றி குறிப்பிட்ட சான், இந்த வைரசின் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட தோற்றம் நியாமானது என பல சிறந்த வைராலஜிஸ்டுகள் கூறி உள்ளனர். இதில் SARS வைரஸில் மாற்றங்களை செய்த வைராலஜிஸ்டுகளும் உள்ளனர். இந்த வைரஸ் தனித்துவமான அம்சத்தை கொண்டுள்ளதை நாங்கள் இப்போது அறிவோம், இது ஃபுரின் பிளவு தளம் என்று அழைக்கப்படுகிறது.

Also Read: தைவான் உடனான நட்பை துண்டித்து மீண்டும் சீனாவை ஆதரித்த மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா..

இது அந்த வைரஸை தொற்றுநோய்க்கான நோய் கிருமியாக மாற்றுகிறது. இந்த அம்சம் இல்லாமல் வைரஸ் இந்த தொற்றுநோயை ஏற்படுத்த வழி இல்லை. செப்டம்பர் மாதத்தில் தான் ஈகோஹெல்த் அலையன்ஸ்ன் விஞ்ஞானிகள், வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி விஞ்ஞானிகளுடன் இணைந்து ஃபுரின் பிளவு தளம் மூலம் மரபணு மாற்றங்களை SARS போன்ற வைரஸ்களில் சேர்ப்பதற்காக இந்த பைப்லைனை உருவாக்கும் திட்டம் தெரியவந்ததாக சான் கூறினார்.

Also Read: சைபர் தாக்குதலை தொடங்கிய தைவான் மற்றும் இந்தியா.. மிகப்பெரிய அச்சுறுத்தல் என சீனா கதறல்..

கொரோனா வைரஸின் உண்மையான தோற்றத்தை உலகம் எப்போது அறிந்து கொள்வது என்ற கேள்விக்கு பதிலளித்த சான், இந்த தொற்று நோயின் தோற்றம் பற்றி அறிந்தவர்கள் இப்போது வெளிவருவது பாதுகாப்பானது அல்ல. உண்மையான தோற்றம் பற்றி தெரிய இப்போது இருந்து இன்னும் 5 வருடங்கள் ஆகலாம் அல்லது 50 வருடங்கள் ஆகலாம். இவ்வளவு தரவுகள் சேகரிக்கப்பட்டு சேமிக்கப்படும் சகாப்ததில் நாம் வாழ்கிறோம்.

Also Read: குளிர்கால ஒலிம்பிக் புறக்கணிப்பு.. அதற்கான விலையை கொடுக்க நேரிடும் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை..

நம்பகமான மற்றும் முறையான விசாரணை தேவை என சான் கூறினார். டாக்டர் சானுடன் இணைந்து வைரஸின் தோற்றம் குறித்த புத்தகத்தை எழுதிய டோரி லார்ட் ரிட்லியின் கூற்றுப்படி, கொரோனா பரவிய இரண்டு வருட ஆய்வுக்கு பிறகும் வைரஸ் இயற்கையாக உருவானதற்கான தோற்றத்தை ஆதரிக்கும் வகையில் விலங்கின் ஹோஸ்டை நிபுணர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது அந்த வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதையே காட்டுவதாக ரிட்லி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.