அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் கோவாக்சின்.. இங்கிலாந்து அரசு அறிவிப்பு..

நவம்பர் 22 ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியும் பட்டியலிடப்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு நவம்பர் 3ஆம் தேதி அன்று அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்தது. இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனிகாவின் தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு கடந்த மாதம் அனுமதி அளித்து இருந்தது.

இந்த நிலையில் தற்போது கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்வோர் இனி தனிமைபடுத்தப்பட மாட்டார்கள் என இங்கிலாந்து அரசு கூறியுள்ளது. நவம்பர் 22 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் டிவிட்டரில் கூறியதாவது, இந்தியாவின் கோவிஷீல்டை தொடர்ந்து கோவாக்சினையும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் இணைத்துள்ளோம். இதன் மூலம் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட இங்கிலாந்து வரும் பயணிகள் இனி தனிமைபடுத்த படமாட்டார்கள். இந்த நடைமுறை நவம்பர் 22 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

Also Read: தைவானில் அமைய உள்ள தூதரகம்.. ஐரோப்பா, லிதுவேனியாவுக்கு சீனா எச்சரிக்கை..

மேலும் வெளிநாட்டு பயணிகள் இங்கிலாந்து வருவதை எளிமையாக்கி உள்ளோம். தடுப்பூசி செலுத்தியதன் மூலம் இங்கிலாந்து வரும் போது எட்டாவது நாள் சோதனை மற்றும் புறப்படும் போது நடைபெறும் சோதனை ஆகியவற்றில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது என அலெக்ஸ் தெரிவித்தார்.

Also Read: சீனாவுக்கு தடை.. இந்தியாவுக்கு அனுமதி.. இலங்கைக்கு கண்டனம் தெரிவித்த சீனா..

Leave a Reply

Your email address will not be published.