பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் மூலம் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்றலாம்: ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
மத்திய பிரதேசத்தில் கால்நடை மருத்துவர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய மத்திய பிரதேச முகலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் தனி நபரின் பொருளாதாரத்தை உயர்த்தும் என கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் இந்திய கால்நடை மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்த ‘சக்தி 2021’ என்ற மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தன்னுடைய அரசு பசுக்கள் சரணாலயங்கள் மற்றும் தங்குமிடங்களை உருவாக்கியுள்ளது.
ஆனால் அவை தனியாக செயல்பட முடியாது. மக்களின் பங்கேற்பும் தேவை, அப்போதுதான் வளர்ச்சியான சமுதாயத்தை உருவாக்க முடியும் என கூறினார். நாம் முயற்சி செய்தால் பசுக்களின் சாணம் மற்றும் சிறுநீர் மூலம் நமது சொந்த பொருளாதாரத்தை வலுபடுத்தி அதன் மூலம் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்றலாம்.
மேலும் மர கட்டைகளை பயன்படுத்துவதற்கு பதில் பசுவின் சாணத்தை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கலாம். கால்நடைகளை வளர்ப்பதன் மூலம் அதனை எவ்வாறு லாபகரமான தொழிலாக மாற்றலாம் என கால்நடை மருத்துவர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Also Read: மிகவும் அங்கீகரிக்கப்பட்ட உலக தலைவர்கள் பட்டியலில் 70 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடம்..
மத்திய மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பேசுகையில், குஜராத்தின் கிராம பகுதிகளில் பெண்கள் அதிக அளவில் பசு வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். இது அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. மேலும் பால் வணிகமும் அதிகரித்துள்ளது.
Also Read: காலிஸ்தானுக்கு நிதி உதவி.. கனடா சென்ற தேசிய புலனாய்வு அமைப்பு..
கால்நடை மருத்துவர்கள் இந்த துறையில் வணகத்தில் ஈடுபடும் சிறு தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும். இதில் உள்ள வணிகம், பராமரிப்பு போன்றவற்றை எடுத்துகூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் இதனை லாபகரமான தொழிலாக மாற்ற முடியும் என ரூபாலா தெரிவித்தார்.