Z ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள CRPF பெண் கமாண்டோக்கள்..

விஐபி பாதுகாப்பில் பயிற்சி பெற்ற CRPF பெண் கமாண்டோக்கள் முதன்முறையாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் முக்கிய VIP மற்றும் அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐந்து மாநில தேர்தல் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

மத்திய போலிஸ் ரிசர்வ் படை (CRPF) முதன்முறையாக 32 பெண் கமாண்டோக்களை உருவாக்கி உள்ளது. இவர்கள் டெல்லியை தளமாக கொண்ட விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்க ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்கள் விஐபிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல், உடல் சோதனை, நிராயுதபாணியான போர் மற்றும் சிறப்பு ஆயுதங்களை சுடுதல் போன்றவற்றில் 12 வாரகால பயிற்சியை முடித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் முதற்கட்டமாக, மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன்சிங் மற்றும் அவரது மனைவி குர்ஷரன் கவுர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள Z+ பிரிவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் இந்த பணியில் அதிக ஆபத்து இருப்பதால் மேம்பட்ட பாதுகாப்பு தொடர்பு நெறிமுறையும் வழங்கப்படுகிறது. சுமார் ஒரு டஜன் Z+ பிரிவு விஐபிக்களின் பாதுகாப்பில் சுழற்சி அடிப்படையில் CRPF பெண் கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

Also Read: அணு சக்தி திறன் கொண்ட அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

இந்த பெண் கமாண்டோக்கள் குறிப்பாக சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு நெருங்கிய பாதுகாப்பை தருவார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் விஐபிக்களின் பாதுகாப்பிற்காக வீட்டின் முன் நிறுத்தப்படும் போது பெண் பார்வையாளர்களை சோதனையிடுவார்கள். மேலும் விஐபிகளின் வீட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு தகவலும் இவர்களிடம் இருக்கும்.

Also Read: 2008 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை: அமெரிக்கா அறிக்கை

அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உத்திர பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் கோவா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின் போது அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்வார்கள். இதனால் அரசியல் களம் பரபரப்பாக இருக்கும். அப்போது தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பு பணிகளுக்கு பெண் கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த பெண் கமாண்டோக்கள், ஆண் கமாண்டோக்களை போலவே ஆயுதங்கள், பாலிஸ்டிக் பாதுகாப்பு மற்றும் பிற கேஜெட்களை எடுத்து செல்வார்கள்..

Also Read: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவனை சுட்டுத்தள்ளிய இந்திய இராணுவம்..

Leave a Reply

Your email address will not be published.