மீண்டும் கடன்.. சீனா இலங்கை இடையே ஒப்பந்தம்..?

இலங்கை சீனாவிடம் மீண்டும் 308 மில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளது. ஆகஸ்ட் 17 செவ்வாய் கிழமை அன்று இலங்கை மற்றும் சீனா இடையே கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

இலங்கையின் கொரோனா தொற்று மற்றும் நிதி நிலைமையை சமாளிக்கவும் இந்த கடனை இலங்கை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சீனாவிடம் அதிக கடன் வாங்கி சீனாவின் கடன் வலைக்குள் இலங்கை சிக்கி விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இலங்கை சீனாவிடம் மட்டும் 8 பில்லியன் டாலர் அளவிற்கு கடன் வாங்கியுள்ளது. இலங்கையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 80 சதவீதம் கடனுக்கான வட்டி மட்டும் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் மேலும் 308 மில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளது இலங்கை.

ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் தான் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவிடம் வழங்கியுள்ளது இலங்கை. மேலும் கொலும்பு துறைமுக நகர பணிகளுக்கான மசோதாவை இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் சீனா செயற்கையாக நிலப்பரப்பை உருவாக்கி கட்டுமானத்தை கட்டி வருகிறது.

மேலும் இந்த நிலப்பரப்பை இலங்கையிடம் சீனா 99 வருட குத்தகைக்கு கேட்டுள்ளது. இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளதால் கொலும்புவில் கட்டப்பட்டு வரும் சர்வதேச நகரத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து கடனை அடைக்க இலங்கை திட்டமிட்டுள்ளது.

சீனா இந்தியாவை சுற்றி வளைக்கவும், பட்டுப்பாதை திட்டத்தின் மூலம் பொருளாதார ஏற்றுமதிக்காகவும் பாகிஸ்தான், மியான்மர், இலங்கை போன்ற நாடுகளுக்கு அளவுக்கு அதிகமாக கடன் வழங்கி அந்த நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் சீனா கொண்டு வந்துவிட்டதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.