தீபாவளி பண்டிகை விற்பனை.. சீனாவுக்கு 50,000 கோடி நஷ்டம்..? CAIT அறிவிப்பு..

தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சீனாவுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து வரும் பொருட்களை இந்தியர்கள் புறக்கணித்து வருவதால் இந்த வருடம் சீனாவுக்கு 50,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என CAIT தெரிவித்துள்ளது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீன பொருட்களின் தடையால் உள்நாட்டு உற்பத்தி பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். தீபாவளி பண்டிகையின் போது மட்டும் இந்தியா முழுவதும் 2 லட்சம் கோடி அளவுக்கு பொருட்கள் விற்பனை ஆகின்றன.

சீனாவின் பட்டாசு, LED விளக்குகள் மற்றும் பிற மலிவான பண்டிகை பொருட்களை புறக்கணிக்க CAIT அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இந்திய மக்களும் சீன பொருட்களை வாங்க விரும்பவில்லை. நாங்கள் 20 வர்த்தக நகரங்களில் மேற்கொண்ட ஆய்வில் சீன பட்டாசு அல்லது பிற பண்டிகை பொருட்களுக்கான ஆர்டர்கள் சீன ஏற்றுமதியாளர்களிடம் இருந்து இதுவரை யாருக்கும் வரவில்லை என CAIT கூறியுள்ளது.

மக்களுக்கு சீன பொருட்களின் மீது ஆர்வம் இல்லாததால் இந்திய பொருட்களின் தேவை அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் ராக்கி, தீபாவளி என அனைத்து பண்டிகைகளுக்கும் சீனாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படும். இதன் மூலம் சீனாவுக்கு சுமார் 70,000 கோடி வருமானம் ஈட்டி வந்தது.

Also Read: சீனாவை விட்டு வெளியேறும் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனம்..

ஆனால் இந்க முறை ராக்கி பண்டிகையின் போது சீனாவுக்கு 5,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கும் இதே நிலை நீடித்தால் சுமார் 50,000 கோடி முதல் 60,000 கோடி வரை சீனா நஷ்டம் அடைவது உறுதி என CAIT கூறியுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா சீனா இடையே லடாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே பரவியதால் கடந்த ஆண்டு தீபாவளிக்கும் சீனா மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: சீனாவுக்கு எதிராக சோலார் பேட்டரி சந்தையில் களமிறங்க உள்ள ரிலையன்ஸ் நிறுவனம்..

Also Read: சீனாவை விட்டு வெளியேறும் பெரும் நிறுவனங்கள்.. இந்தியாவில் கால்பதிக்கும் ஆப்பிள்..

Leave a Reply

Your email address will not be published.