சோனியா காந்தியின் உதவியாளர் மீது டெல்லி போலிசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு..

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தனி உரிமையாளர் பிபி மாதவன் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையிடம் ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறையிடம் அந்த பெண் அளித்த புகாரில், பிபி மாதவன்(71) தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பிபி மாதவன் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணின் கணவர் காங்கிரஸ் அலுவலகத்தில் போர்டுகளை வைப்பது மற்றும் பிற வேலைகளை செய்து வந்தவர் ஆவார். அவர் 2020 ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். அந்த பெண் கூறுகையில், பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு என் கணவர் இறந்த பிறகு நான் வேலை தேட ஆரம்பித்தேன். அப்போது மாதவனின் தொடர்பு கிடைத்தது.

அவர் முதலில் என்னை நேர்காணலுக்கு அழைத்தார். அவர் வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசுவார். அவர் என்னை உத்தம் நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்று தனது காரில் என்னை வலுக்கட்டாயமாக தாக்கினார்.பிப்ரவரி 2022 ல் அவர் என்னை சுந்தர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்று என் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதனை அடுத்து ஜூன் 25 ஆம் தேதி மாதவன் மீது அந்த பெண் புகார் அளித்ததை தொடர்ந்து பிபி மாதவன் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி உத்தம் நகர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மாதவன் மறுத்துள்ளார். இது முற்றிலும் ஆதாரமற்றது, இது ஒரு சதி என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.