டெல்லி செங்கோட்டை கலவரம்.. தீப் சித்து மீதான விசாரணையை ஒத்தி வைத்தது நீதிமன்றம்..?

கடந்த ஆண்டு விவசாயிகள் போராட்டத்தின் போது டெல்லி செங்கோட்டையில் நடந்த கலவரம் தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தீப் சித்து மீதான ஜாமின் மனு திங்கள் கிழமை ஒத்திவைக்கப்பட்டது. நேற்று மீண்டும் வழக்கு வந்தபோது நீதிபதி நீலோபர் அபிதா பர்வீன் ஜாமீன் மீதான உத்தரவு ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூறினார்.

டெல்லி காவல்துறை சார்பில் வாதாடிய அரசு வக்கில் கூறுகையில், சித்து வன்முறையை தூண்டி தேசிய கொடியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனே போராட்டத்தில் பங்கேற்றதாகவும், வன்முறையை தூண்டியதில் சித்துவுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அரசு வக்கில் தெரிவித்தார்.

சித்து சார்பில் வாதாடிய வக்கில் அவர் வன்முறையை தூண்டவில்லை என்றும், அவர் ஆர்பாட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தார் என்றும், அவர் ஒரு நேர்மையான குடிமகன் என சித்து வக்கில் கூறினார்.

தீப் சித்துவுக்கு ஜாமீன் வழங்க கூடாது என டெல்லி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்துவிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ஹரியானாவில் பிப்ரவரி 9 ஆம் தேதி தீப் சித்து கைது செய்யப்பட்டார். அவர் மீது FIR பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *