ஆந்திராவில் துர்கை அம்மன் கோவில் இடிப்பு.. ஜெகன்மோகன் ரெட்டிக்கு பொதுமக்கள், எதிர்கட்சிகள் கண்டனம்..
ஆந்திராவில் அரசாங்கத்தால் இந்து கோவில் இடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு வருவதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
ஆந்திராவில் ஸ்ரீகாகுளம், பாதப்பட்டினம் பகுதியில் உள்ள நீலமணி துர்கை அம்மன் கோவில் சாலை விரிவாக்க பணிக்காக நகராட்சி நிர்வாகத்தால் இடிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் கோவில் பூசாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் எவ்வித முன் அறிவிப்பு இன்றி கோவில் இடிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
ஆந்திர பாரதிய ஜனதா கட்சியின் இணை பொருப்பாளரான சுனில் தியோதர் கூறுகையில், இந்து கோயில்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டு வருவதற்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கடந்த காலங்களில் இந்து கோவிலை இடித்தவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகிறார்கள். அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறினார். மேலும் நீலமணி துர்கை அம்மன் கோவில் இடிக்கப்பட்டதற்கு தியோதர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக ராஜ்யசபா எம்பி GVL நரசிம்மாராவ் கூறுகையில், ஆந்திராவில் தொடர்ந்து இந்து கோவில் இடிக்கப்பட்டு வருகிறது, சிலைகள் அவமதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஜெகன்மோகன் ரெட்டி இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். கோவிலை இடித்தவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும் என கூறீனார்.
தெலுங்கு தேசம் கட்சியின் நாரா லோகேஷ் கூறுகையில், நீலமணி துர்கை அம்மன் கோவில் இடிப்பு கொடூரமானது. அவரது இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் இந்த கோவில் இடிப்பு மட்டும் இல்லாமல் கடந்த ஜூலை மாதம் அந்தர்வேதி கோவில் தேர் எரிக்கப்பட்டது. ராமர் தீர்த்தத்தில் உள்ள சிலைகள் உடைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டன. இதற்கு ஜெகன்மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என லோகேஷ் கூறினார்.
Also Read: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாற உள்ளதாக இந்தோனேசிய முதல் ஜனாதிபதியின் மகள் அறிவிப்பு..
இதற்கு ஆந்திர அரசு சார்பில், கோவில் இடிக்கப்பட்டத்தில் எந்த தவறும் இல்லை. சாலை மேம்பாலம் கட்டுவதற்கு இடம் தேவை பட்டது. அதற்காக கோவிலின் வளைவு மட்டுமே இடிக்கப்பட்டது. கோவில் இடிப்பது தொடர்பாக 2020 ஆம் ஆண்டே கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
Also Read: இஸ்லாம் எங்களின் மாநில மதம் கிடையாது.. பங்களாதேஷ் மதசார்பற்ற நாடு: முராத் ஹசைன்
மேலும் இழப்பீடாக 1,40,57,404 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தின் அனுமதியுடன் தான் கோவில் இடிக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகவே ஆந்திராவில் இந்து கோவில்கள் இடிப்பு அதிகரித்து வருகிறது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்துவர் என்பதால் கிறிஸ்துவ மிஷினரிகளின் தூண்டுதலாலயே கோவில் இடிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Also Read: ஷியா முஸ்லிம்கள் எங்கு இருந்தாலும் குறி வைக்கப்படுவீர்கள்: ஐஎஸ் அமைப்பு எச்சரிக்கை